உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 20 வாரிசுகளுக்கு அமைச்சரவையில் இடம்: ராகுல் விமர்சனம்

20 வாரிசுகளுக்கு அமைச்சரவையில் இடம்: ராகுல் விமர்சனம்

புதுடில்லி: மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் 20 வாரிசுகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பா.ஜ., கையில் எடுத்த முக்கிய ஆயுதங்களுள் ஒன்று வாரிசு அரசியல். காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி என எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் வாரிசு அரசியல் செய்வதாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்து வந்தனர். தேர்தல் முடிவுக்கு பின்னர், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி, தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். அவருடன் சேர்த்து 72 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=axixftzt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், மோடியின் அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் கொடுத்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் குமாரசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் மாதவ் ராவ் சிந்தியா மகன் ஜோதிராதித்ய சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான், முன்னாள் எம்.பி., ஜெய்ஸ்ரீ பானர்ஜி மருமகன் நட்டா, முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் கோயல் மகன் பியூஷ் கோயல் என 20 பேர் அடங்கிய வாரிசுகளின் பட்டியலை வெளியிட்டார் ராகுல்.பட்டியலுடன் ராகுல் பதிவிட்டதாவது: ''பரம்பரை பரம்பரையாக போராட்டம், சேவை, தியாகம் தான் எங்கள் மரபு என்று சொல்வோர், 'அரசு குடும்பத்தில்' வாரிசுகளுக்கு இடம் கொடுத்துள்ளனர். நரேந்திர மோடியின் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்''. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 74 )

SRINIVASAN
ஜூன் 14, 2024 18:03

ஒரு ஸ்வீட் ஸ்டாலே ஸ்வீட் சாப்பிடுகிறது. கல்யாண வீடோ காரிய வீடோ அங்கே நாங்கள் மட்டுமே. எப்போ பார்த்தாலும் எங்கப்பா குதிருக்குள்ளே இல்லேன்னு செயல்படுவதற்கும் புத்தி வேண்டுமே


SRINIVASAN
ஜூன் 14, 2024 18:03

ஒரு ஸ்வீட் ஸ்டாலே ஸ்வீட் சாப்பிடுகிறது. கல்யாண வீடோ காரிய வீடோ அங்கே நாங்கள் மட்டுமே. எப்போ பார்த்தாலும் எங்கப்பா குதிருக்குள்ளே இல்லேன்னு செயல்படுவதற்கும் புத்தி வேண்டுமே


தத்வமசி
ஜூன் 14, 2024 13:05

நாலாம் தலைமுறை வாரிசு அரசியல் செய்பவர் வாரிசு அரசியல் பற்றி பேச என்ன தகுதி உள்ளது ?


vidhu
ஜூன் 14, 2024 11:07

வாரிசு அரசியல் பத்தி ராகுல் பேசலாமா. ஸ்டாலின்க்கோ, ராகுல்க்கோ இது பத்தி பேச தகுதி இல்லை


Balakrishnen a
ஜூன் 14, 2024 05:49

ராகுலே வாரிசு அரசியல்வாதி தான் ஸ்டாலின் அவரது மகன் வாரிசு வாரிசை பற்றி பேச வந்துவிட்டார்


sundaresan Ramamoorthy
ஜூன் 13, 2024 19:11

நல்ல வேளை இந்த அறிவு ஜீவுகள் ஆட்சியில் இல்லை. இந்த நாடு துக்ட துக்டாவாக சிதறி போய் இருக்கும். இந்த ஆளுக்கு அரசியிலும் தெரியாது இந்தியா பற்றியும் ஒன்றும் தெரியாது. யாரோ சொல்வதை கேட்டு பேசும் ஒரு பப்பு அவ்வளவுதான்.


selvelraj
ஜூன் 14, 2024 06:22

ஐயா திராவிட மாடல் உடனான கூட்டணி அப்படித்தான். எழுதிக்கொடுத்த துண்டு சீட்டைக்கூட உருப்படியாக படிக்கத்தெரியாத கூட்டம் இது.


Thirunavukkarasu Sivasubramaniam
ஜூன் 13, 2024 15:33

வாரிசு அரசியலுக்கும் ஒரு குடும்பத்தின் சொத்தாக ஒரு கட்சி இருப்பதற்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது. பி.டீ.ஆர். ஒரு வாரிசு அரசியலுக்கு உதாரணம். இதில் தவறில்லை. நாட்டின் முக்கிய கட்சியான காங்கிரஸ் ஒரு குடும்பத்தின் சொத்தாக இருப்பது தான் தவறு. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பிஜேபி விமர்சனம் செய்தது குடும்ப அரசியல். ராகுல் சொல்வது வாரிசு அரசியல்.


RAJ
ஜூன் 13, 2024 08:53

அறிவு ஜீவி மாதிரியா பேசுவாரு... நீ ஒரு எடுத்துக்காட்ட இரு.. சொல்லு நான் ராஜினாமா பண்றேன், இன்னொரு காங்கிரஸ் தொண்டனுக்கு சான்ஸ் குடுக்குறேன்னு.. ஹா ஹா ஹா...


M Ramachandran
ஜூன் 12, 2024 19:03

எதிராணியாய்ய்ய குற்றக்ம் சாத்துமுன் உஙகஙகள் கூட்டணியில் இருக்கும் தீ மு க்கா அமைச்சர்களின் ஆர்சுகள் எத்தனையய பெயர் பதவியில் யிருக்கிறார் யென்று எவ்வளவு எண்ணிக்கையயை தெரியுமா ராவுளு


panneer selvam
ஜூன் 12, 2024 17:56

If you take the examples of Rahul ji on inheritance , majority of these people become minister after demise of their parents and did party work for a considerable time , not straight to high post like Sonia ji who just came out of kitchen and became the chief of Congress party


மேலும் செய்திகள்