உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓட்டளிக்க இன்று(மே.07) குஜராத் செல்கிறார் மோடி

ஓட்டளிக்க இன்று(மே.07) குஜராத் செல்கிறார் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: லோக்சபா தேர்தலில் மூன்றாம் கட்டமாக இன்று (மே.07) நடைபெற உள்ள தேர்தலில் குஜராத்தில் ஆமதாபாத்தில் ஓட்டளிக்க குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி.ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில் இரு கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்டமாக இன்று, 12 மாநிலங்களில் 94 தொகுதிகளுக்கு ஒட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதில் பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தின் ஆமதாபாத் நகரில் நிஷான் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு சென்று பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்கிறார். இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் சூரத் தொகுதிக்கு போட்டியின்றி ஒருவர் எம்.பி.யாக தேர்வாகியுள்ளார். மீதமுள்ள 25 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பாமரன்
மே 06, 2024 22:29

நம்ம ரம்மி ரவி கூட எப்ப வேணும்னாலும் ராஜ்பவனை காலி பண்ண சொல்வாங்கன்னு தெரிஞ்சும் தன்னோட வாக்கை அந்த அட்ரஸ்கு மாத்திட்டு இங்கே ஓட்டு போடுறாப்ல ஆனால் மக்கள் பணத்தில் புத்சா டெல்லியில் குடிசை கட்டியும் அட்ரஸை குசராத்த விட்டு மாத்தலை? எதாவது ஒரு விதத்தில் இவர் பிரதமர் அப்பிடின்னு நம்ப வைப்பார்ன்னு பார்த்தால் இன்னும் முதல்வர் மாதிரியே நடந்துக்கறாப்ல,? சரி சரி இன்னும் ஒரு மாதத்தில் அங்கேயே திரும்ப குடிபோகும் ஐடியா போல?


Anantharaman Srinivasan
மே 06, 2024 20:27

என்னிடம் வீடு கார் சைக்கிள் எதுவும் கிடையாது அரசாங்க வாகனம் தான்


ஆரூர் ரங்
மே 06, 2024 21:36

ஸ்டாலின் வேட்புமனுவில் கூட உள்ளது.


மேலும் செய்திகள்