உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடியின் ‛கியாரண்டியால் காங்கிரசுக்கு பயம்: பிரதமர் மோடி தாக்கு

மோடியின் ‛கியாரண்டியால் காங்கிரசுக்கு பயம்: பிரதமர் மோடி தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நவாடா: ‛‛ மோடியின் ‛கியாரண்டி'யை பார்த்து காங்கிரசுக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும் பயம் ‛‛ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.பீஹார் மாநிலம் நடாடாவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டில் 2014க்கு முன் வளர்ச்சி இல்லாமல் இருந்தது. மக்கள் தேர்வு செய்யும் வலிமையான அரசானது, நாட்டிற்காக தைரியமாக முடிவுகளை எடுக்க முடியும். 60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை, 10 ஆண்டுகளில் செய்துள்ளோம். நான் ஏழை மக்களுக்காக பணியாற்றுகிறேன்.மோடியின் கியாரண்டியை பார்த்து காங்., ஆர்ஜேடி பயமடைந்துள்ளன. மோடியின் கியாரண்டி என்பது உறுதியான வாக்குறுதி. ஆனால், இதனை சட்டவிரோதம் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. நாட்டிற்காக உழைப்பது தவறாமக்களுக்கான திட்டங்கள் எதுவும் ‛இண்டியா' கூட்டணியிடம் இல்லை. ஊழல் தலைவர்களின் கூட்டணி என்பதே இண்டியா கூட்டணிக்கு விளக்கம். காஷ்மீரில் அம்பேத்கரின் அரசியல்சாசனத்தை நிறுவி உள்ளேன் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. பாரதத்தை தாக்கியவர்கள் உணவில்லாமல் அவதிப்படுகின்றனர்.முஸ்லிம் லீக்கின் கொள்கை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பிதிபலிக்கிறது. பிரிவினைவாத அரசியலை காங்கிரஸ் பரதிபலித்து வருகிறது. சனாதன தர்மத்தை அழிப்போம் என காங்கிரஸ் நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Dr.A.Duraisamy
ஏப் 07, 2024 17:48

ஒரு ஏமாற்று வேலை செய்யும் தமிழ்நாட்டுக்கு வரீங்க அடிக்கடி திட்டமும் நிதியும் தமிழ்நாட்டுக்கு தருவதில்லை


Dr.A.Duraisamy
ஏப் 07, 2024 17:45

Mr மோடி உங்க கேரண்டி enna?


Oviya Vijay
ஏப் 07, 2024 14:37

ஒரு மண்ணும் இல்லை...


raj
ஏப் 07, 2024 14:22

காமெடி


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ