உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் குறித்து சோனியாவிடம் புகார் அளித்த முன்னாள் எம்எல்ஏ காங்கிரஸில் இருந்து நீக்கம்

ராகுல் குறித்து சோனியாவிடம் புகார் அளித்த முன்னாள் எம்எல்ஏ காங்கிரஸில் இருந்து நீக்கம்

புவனேஸ்வர்: ராகுல் குறித்து சோனியாவிடம் கடிதம் மூலம் புகார் அளித்த ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவை கட்சியில் இருந்து நீக்கம் செய்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் வலிமை இழந்து வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தேசிய தலைவருமான சோனியாவுக்கு, ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் நிர்வாகியுமான முகமது மொகிம் என்பவர் கடிதம் எழுதியிருந்தார். மேலும், 5 பக்கம் கொண்ட கடிதத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் ஆகியோர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4p3v171k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கட்சியின் தலைமைக்கும், அடிமட்ட தொண்டர்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவேளை இருப்பதாகவும், 83 வயதான கார்கேவால், இளைய சமுதாயத்தினருடன் இணைந்து செயல்பட முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாகவே, ஜோதிராதித்ய சிந்தியா, ஹிமாந்த பிஸ்வா சர்மா போன்ற இளம் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாகவும், தொடர்ச்சியான தவறான முடிவுகள், மோசமான தலைமையும், பொறுப்பான பதவிகளை தகுதியற்றவர்களுக்கு வழங்கியதுதான் காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விக்கு காரணம் என்று வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முகமது மொகிம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

பேசும் தமிழன்
டிச 15, 2025 19:47

என்ன தான் பிள்ளையாக இருந்தாலும்... மகனை பற்றி அவரது அம்மாவிடமே புகார் செய்தால் எப்படி.... அது தான் கட்சியை விட்டு நீக்கி விட்டார்கள்.


நாஞ்சில் நாடோடி
டிச 15, 2025 18:08

லங்காவில் ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை காவு வாங்கிய காங்கிரஸ் எப்படியாவது மண்ணோடு மண்ணாகினால் சரிதான் ...


Nachiar
டிச 15, 2025 17:31

ராகுல் கான் லே லாடாக்கின் அதிக பாதுகாப்பான இடத்துக்கு ஜோர்ஜ் சோர்ஸ் இந்திய எதிர்ப்பாளர்களின் முக்கிய ஆள் இத்தாலியில் இருந்து ஒரு வின்சி என்பவர் இரண்டு கென்யா நாட்டின் இஸ்லாமிய மாணவர்களுடன் ஏன் போனார் எப்படி அனுமதி கிடைத்தது என்பதை அறியதரலாமா?


Rengaraj
டிச 15, 2025 17:28

இளைஞர்களை வளரவிட மாட்டாங்க. நிர்வாகிகளை நேரில் சந்திக்கமாட்டாங்க , ஆலோசனை, கருத்து எதுவும் கேட்கமாட்டாங்க, ஏதாவது எதிர்த்து பேசினா கட்சியை விட்டு நீக்கிடுவாங்க ஆனால் கட்சி மட்டும் ஜெயிக்கணுமாம் , என்னய்யா கட்சி இது , இந்த லட்சணத்தில் போனா , காங்கிரஸில் ஒருத்தரும் தேர்தலில் நிற்கவே வரமாட்டாங்க , அப்புறம் எப்படி ஜெயிக்கிறது. ???


kumarkv
டிச 15, 2025 17:07

இதுதான் கான்கிரஸ்


Sivakumar
டிச 15, 2025 20:31

எது கான் ? எது கிராஸ் ??


Venugopal, S
டிச 15, 2025 21:58

இருநூறு குடுத்து கட்சியில் அடிமை மெம்பர் க்கு அப்ளை செய்யலாம்.


Sivakumar
டிச 15, 2025 22:46

கேட்ட கேள்விக்கு பதில் இல்லாவிட்டால் ஒத்துக்கொள்ளாமல் மடைமாற்றம் செய்யலாமா ?


KOVAIKARAN
டிச 15, 2025 17:07

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து முகமது மொகிம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்பது செய்தி. இதில் என்ன மாதிரியான கட்சி விரோத செயல்கள் உள்ளது? திரு தரூர் MP போல பாஜக வைப் புகழ்ந்தாரா, அல்லது பிரதமர் மோடி அவர்களை புகழ்ந்தாரா அல்லது ராகுல் பப்புவுடன் பேசமாட்டேன் என்றாரா? 89 வயது மந்திரியாலும் இளவரசராலும் காங்கிரஸ் கட்சியை படுபாதாளத்திற்குப் போவதை காப்பாற்றமுடியவில்லை என்றுதானே கூறினார்.


Rathna
டிச 15, 2025 17:02

முஸ்லிம் ஆதரவு கட்சியில் அவங்களுக்கே ஆப்பா? பாகிஸ்தானை கேட்டுத்தான் செய்தீர்களா? என்ன நடக்கிறது?


Sivakumar
டிச 15, 2025 19:44

எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தின் வாக்குகளையும் அண்டிப்பிழைக்கும் ஈனப்பிழைப்பு நடத்தும் கட்சியல்ல காங்கிரஸ். எல்லோரையும் சமமாய் அரவணைத்துப்போகும் மேலான கட்சி


பேசும் தமிழன்
டிச 15, 2025 21:16

பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது.... இதை சின்ன குழந்தை கூட நம்பாது.... கான் கிராஸ் கட்சி என்றாலே கான் மற்றும் கிராஸ் ஆட்களுக்கு மட்டுமெ என்பது உலகம் அறிந்த உண்மை.


Sivakumar
டிச 15, 2025 22:48

ஆதாரத்தோடு நிறுவுங்கள் பார்க்கலாம், காங்கிரஸ் எந்த மதத்திற்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்று


Vasan
டிச 15, 2025 16:55

Congress party is functioning like a typical Corporate company, by punishing the Whistle-blower.


HoneyBee
டிச 15, 2025 16:53

இதுதான் கான்கிராஸ்.. அவர்கள் மாமன்னர்கள் எதுவும் சொல்ல கூடாது சொன்னால் இதுதான் நிலைமை


kulanthai kannan
டிச 15, 2025 16:36

அவ்வளவு பதவி வெறி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை