உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காசு மேலே காசு வந்து…கோடிகளில் சம்பாதிக்கும் இந்தியர் எண்ணிக்கை அதிகரிப்பு

காசு மேலே காசு வந்து…கோடிகளில் சம்பாதிக்கும் இந்தியர் எண்ணிக்கை அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 63 சதவீதம் அதிகரித்துள்ளது.மும்பையைச் சேர்ந்த சென்ட்ரம் ஆராய்ச்சி நிறுவனம் என்ற நிதி சார்ந்த அமைப்பு கோடீஸ்வரர்கள் சம்பளம் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது.அதன் முடிவுகளில் கூறப்பட்டு உள்ளதாவது:ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 63 சதவீதம் அதிகரித்து உள்ளது. தற்போது 31,800 பேர் ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுகின்றனர்.இவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.38 லட்சம் கோடி சம்பாதித்து உள்ளனர். ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு மேல் 58,200 பேர் சம்பாதிக்கின்றனர். இது 49 சதவீதம் அதிகம் ஆகும். இந்த வகையினர் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.40 லட்சம் கோடி வருவாய் ஈட்டி உள்ளனர்.அதேபோல், 10 கோடி பேர் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பாதிக்கின்றனர். இது கடந்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்த வகையினர், 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.49 லட்சம் கோடி சம்பாதித்து உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Mario
செப் 17, 2024 21:38

சொல்வதெல்லாம் பொய்


Rathina Gandhi
செப் 17, 2024 21:12

நேர்மையாக சம்பாதிப்பவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். குறுக்கு வழியில் பணம் பார்ப்பவர்களே அதிகம் பேர். இவர்கள் புத்திசாலிகள் இருப்பார்கள்


thamizhagam
செப் 17, 2024 20:30

pitchai eduppavar ennikkai ippam koodirukka? illa kuranjirukka ?


KayD
செப் 17, 2024 17:16

உழைத்து சம்பாதிச்ச ஆட்கள் விட ஏமாற்றி... லஞ்சம் வாங்கி... கொள்ளை அடித்து sambaarichavargal தான் அதிகம் இருப்பாங்க...


Smart Man
செப் 17, 2024 16:40

கடைசியா எழுதினுது தவறு. 10 லட்சம் (கோடி கிடையாது) பேரு, 50 லட்சம் மேல் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


sridhar palani
செப் 17, 2024 16:30

The rich get richer and the poor get poorer.


sridhar
செப் 17, 2024 16:21

இரண்டு ஆண்டுகளில் முப்பதாயிரம் கோடி சம்பாதிட்டாராம் .


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 17, 2024 15:56

ஊ ஊ பீயி ஸ் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிடுறதா முடிவே பண்ணிட்டீங்களா ???? அவனுங்க தன்னுடைய வழித்துச் சுருட்டும் எஜமானர்களை நினைச்சே பார்க்க மாட்டானுங்க ..... அதானி, அம்பானி பத்தியே பேசிக்கிட்டு இருப்பானுங்க .....


R. Seenivasan
செப் 17, 2024 15:34

, பாரதம் ஏழை நாடு அல்ல என்பது நிருபணம் ஆகி விட்டது.


புதிய வீடியோ