உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேலும் 487 இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்கா: வெளியுறவு அமைச்சகம் தகவல்

மேலும் 487 இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்கா: வெளியுறவு அமைச்சகம் தகவல்

புதுடில்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மேலும் 487 இந்தியர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். 104 இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களின் கைகளில் விலங்கு போட்டு, கால்களில் சங்கிலி மாட்டி ராணுவ விமானத்தில் கொண்டு வந்து இறக்கிய நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்த பிரச்னை பார்லிமென்டில் புயலை கிளப்பியது. ராஜ்யசபாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்து இருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i7fd1dhq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், டில்லியில் நிருபர்களைச் சந்தித்த வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: பிப்.,10 -12 தேதிகளில் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி பிப்.,12, 13 ஆகிய தேதிகளில் அமெரிக்காவிற்கு செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை சந்திக்க உள்ளார். டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபரான பிறகு, மோடியின் முதல் அமெரிக்க பயணம் இதுவாகும். அதிபரான பிறகு அவரை சந்திக்கும் வெகு சில தலைவர்களில் மோடியும் ஒருவர் ஆவார்.அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். நாடு கடத்தப்படுபவர்களை, முறையாக கையாள வேண்டும் என அமெரிக்காவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 2012 ல் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட போது, இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்தியர்கள் நாடு கடத்தப்படும் விவகாரத்தில், இந்தியா தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருகிறது.மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக எத்தனை பேர் என கூற முடியாது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா அரசுடன் தொடர்பில் இருக்கிறோம். சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது தேசிய பாதுகாப்பு நடவடிக்கை என அமெரிக்கா விளக்கம் அளித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு புகார்

இதனிடையே, அமெரிக்காவில் இருந்த சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்ட இந்தியர்கள் மோசமாக கையாண்ட விதம் குறித்த அமெரிக்கா அரசிடம் இந்திய அரசு கேள்வி எழுப்பி உள்ளதாக தகவல் தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ஜெய்சிங்
பிப் 08, 2025 10:25

அவிங்களை கொண்டு வர காண்டிராக்டை ஏர் இந்தியாவுக்கு குடுத்துரலாம். பல வருஷங்கள் ஃப்ளைட் வரும்படி கேரண்ட்டி. US ரிடர்ன் பெஷல்.


guna
பிப் 08, 2025 06:41

நீயே ஒரு திருட்டு goon என்ற தெரிகிறது


Mediagoons
பிப் 07, 2025 22:33

இந்தியர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுத்துவதுதான் மோடி அரசின் வேலை . பின் அதில் குளிர் காய்வது வழக்கம்


Mediagoons
பிப் 07, 2025 22:32

மோடி ஆட்சியில் இந்தியர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும்


rama adhavan
பிப் 07, 2025 20:54

அவர்களை சுதந்திரமாக இருக்க விட்டால் நல்லதல்ல. கூட வந்த பாதுகாப்பு வீரர்களை சிறை பிடித்து விமானத்தையும் கடத்த வாய்ப்பு உள்ளதே. ஆத்திரக் காரர்கள் எதையும் செய்வார்களே?


சிட்டுக்குருவி
பிப் 07, 2025 20:36

திருப்பி அனுப்பப்பட்டவர்கள் கைவிலங்கோடு மிலிட்டரி விமானத்தில் ஏறுவது வீடியோவில் உள்ளது.ஆனால் அவர்கள் நடந்து செல்லும்போது கால்விலங்கு போடவில்லை.ஏறிய பிறகு போட்டிருப்பதற்கு வாய்ப்பில்லை.


தாமரை மலர்கிறது
பிப் 07, 2025 19:56

ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட இந்தியர்கள் திருட்டுத்தனமாக அமெரிக்காவில் உள்ளார்கள். அனைவருக்கும் சிங்கப்பூர் போன்று மொட்டைபோட்டு, பின்பக்கத்தில் மூன்று அடி போட்டு வரிக்குதிரையாக மாற்றி அனுப்பிவிடுங்கள். அப்போது தான் திருந்துவார்கள். இல்லையெனில் அடுத்த பிளைட் ஏறி அமெரிக்கா வருவார்கள். ஜாக்கிரதை.


Haja Kuthubdeen
பிப் 07, 2025 19:36

ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய அம்சமே சட்டவிரோத குடியேறிகளை சிறை பிடிப்பேன் நாடு கடத்துவேன் என்பதுதான்.இந்தியாவிற்கு மட்டும் விதிவிலக்கல்ல...நம்ம ஆளுங்கதான் மோடிஜி ட்ரம்ப்போட நண்பர்..கமலா ஆண்டி இந்திய பெண் என்று அலப்பறை செய்தது.


venugopal s
பிப் 07, 2025 18:49

வெளியேற்றப்படுபவர்கள் என்ன தமிழக மீனவர்களா , மத்திய பாஜக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு?எல்லோரும் வட இந்தியர்கள், அதிலும் குறிப்பாக குஜராத்திகளும் பஞ்சாபிகளும் தான். அதனால் தான் மத்திய பாஜக அரசு இந்த விஷயத்தில் அதிக அக்கறை காட்டுகிறது!


N Sasikumar Yadhav
பிப் 07, 2025 20:38

கோபாலபுர கொத்தடிமையான உங்களுக்கு எல்லாமே இப்படித்தான் தெரியும்


subramanian
பிப் 07, 2025 22:19

வேணுகோபால் உனக்கு சுரணை இல்லை.


guna
பிப் 08, 2025 06:40

சூடும் சுரணயும் ரெண்டும் இல்லாத ஜென்மம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை