உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மது குடிக்க எதிர்ப்பு தெரிவித்த தாய் கழுத்தறுத்து கொலை

மது குடிக்க எதிர்ப்பு தெரிவித்த தாய் கழுத்தறுத்து கொலை

திருவனந்தபுரம்: வீட்டில் மது குடிக்க எதிர்ப்பு தெரிவித்த தாயின் கழுத்தை அறுத்து கொன்று, எரிக்க முயன்ற கடலோர பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரியை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே நேமம் கல்லியூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமாரி, 74. திருவனந்தபுரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் அஜய் குமார், 58, கடலோர பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரி. குடிபோதைக்கு அடிமையான அஜய்குமார், பலமுறை போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டும் குடிப்பதை நிறுத்தவில்லை. இதனால் மனைவி பிரிந்து சென்ற நிலையில், தாயுடன் வசித்தார். நேற்று முன்தினம் இரவு 11:45 மணிக்கு வழக்கம் போல் வீட்டில் அஜய் குமார் மது அருந்தினார். இதற்கு விஜயகுமாரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆத்திரமுற்ற அஜய் குமார் கத்தியால் தாயை சரமாரியாக குத்தினார். பின் கழுத்தை அறுத்து கொன்றார். தொடர்ந்து, மதுவை அவரது உடலில் ஊற்றி எரிக்க முயன்றார். தகவலறிந்த நேமம் போலீசார், விஜயகுமாரியின் உடலை மீட்டு, அஜய்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை