உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரேபரேலி மக்களுக்கு சேவை செய்ய தாய் அளித்த வாய்ப்பு : உணர்ச்சி பெருக்கில் ராகுல்

ரேபரேலி மக்களுக்கு சேவை செய்ய தாய் அளித்த வாய்ப்பு : உணர்ச்சி பெருக்கில் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரேபரேலி: ரேபரேலி தொகுதி மக்களுக்கு சேவை செய்வதற்காக எனது தாயார் வழங்கிய வாய்ப்பாக கருதுகிறேன் என காங்.எம்.பி., ராகுல் ரேபரேலி தொகுதியில் இன்று (03.05.2024) வேட்புமனு தாக்கல் செய்த பின் தெரிவித்தார்.லோக்சபா தேர்தலில் உபி. மாநிலம், ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் காங். வேட்பாளர்கள் யார் என கடந்த சில மாதங்களாக பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், ராகுல், சோனியா, பிரியங்கா ஆகியோர் இன்று ரேபரேலி வந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0exhorwj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சோனியாவின் சொந்த தொகுதியான ரேபரேலி தொகுதியில் ராகுல் வேட்புமனு தாக்கல் செய்தார். அமேதி தொகுதியில் காங். மூத்த தலைவர் கே.எல்.சர்மா என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.இது குறித்து ராகுல் கூறியது, ரேபரேலி, அமேதி தொகுதிகள் இரண்டும் எனது குடும்பம் ஆகும். எனது தாயார் நான் இத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என ஆர்வம் காட்டினார். ரேபரேலி தொகுதி மக்களுக்கு சேவை செய்வதற்கு ஒரு வாய்ப்பை எனது தாயார் வழங்கியுள்ளார். இத்தொகுதி மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க போராடுவேன். அமேதியில் போட்டியிடும் கே.எல். ஷர்மா மக்கள் சேவகர். கடந்த 40 ஆண்டுகளாக இத்தொகுதி மக்களால் நன்கு அறியப்பட்டவர். இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

பிரியங்கா விளக்கம்

முன்னதாக ரேபரேலி தொகுதியில் சோனியா மகள் பிரியங்கா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாம் போட்டியிடாதது குறித்து அளித்த பேட்டி, தேர்தலில் தீவிர பிரசாரம் செய்வதற்காகவே போட்டியிட வில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

Karunan
மே 06, 2024 19:56

அப்ப வயநாடு அவ்வளவுதானா ?வயநாடு மக்களே இந்த பிஸ்கட் முகம் paareer


Visu
மே 06, 2024 00:27

டியர் ராகுல்ஜி யு ர் unfit


Kalyanaraman
மே 05, 2024 13:19

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இந்த தொகுதிக்கு என்ன செய்தது? எதிர்க்கட்சியாக கூட இல்லாத நிலையில் இந்த தொகுதிக்கு என்ன செய்து விடப் போகிறது? ஏமாறும் ஜனங்கள் இருக்கும் வரை ஏமாற்றும் அரசியல்வாதிகளும் இருப்பார்கள்


J.V. Iyer
மே 05, 2024 04:12

எல்லாவற்றிலும் சொதப்புவதில் தத்தி ராகுல் புலி இங்கும் இவர் வாயால் வடை சுட்டு தோற்றுப்போவார் என்று கூறினால் தவறேதும் இல்லை


vijay
மே 05, 2024 01:41

அப்படியே நீங்க சேவை செஞ்சுட்டாலும் நாங்க அலுத்துத்தான் போயிடுவோம் பாருங்க முன்னெச்சரிக்கையா ரெண்டாவது தொகுதி ரெண்டுல ஜெயித்தாலும் ஒன்னுல ராஜினாமா செய்யணும், செஞ்சாள் அங்கு இடைத்தேர்தல் வரும் அங்க யாரை வேட்பாளரா போடுவீங்க?


Barakat Ali
மே 04, 2024 15:10

உணர்ச்சிப் பெருக்கால் சொல்லாமல் கொள்ளாமல் பறந்துவிடப்போகிறார்


lana
மே 04, 2024 14:07

தீவிர பிரசாரம் செய்ய வேண்டி உள்ளதால் போட்டி இட வில்லை. தான் இருக்காரு போல. அதனால் போட்டி இடுகிறார்.


Rajasekar Jayaraman
மே 04, 2024 12:07

அமேதி தொகுதியில் நீங்கள் செய்த சேவை ரொம்ப ரொம்ப அதிகம் அதனால் 2019-ல் தோற்கடித்து ரெஸ்ட் எடுக்க சொன்னார்கள் இப்ப ரோய்பாரேலி தொகுதியா ஐயோ பாவம் ஆழ்ந்த இரங்கல்


Senthil K
மே 04, 2024 09:59

என்னென்ன கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றார் பாருங்க... சார்.. ரேபரேலி ல போட்டி போடுறதே.. ஒரு பக்கம் பா.ஜ., வைத்த ஆப்பு.. மறுபக்கம்.. கம்யூனிஸ்ட்கள்.. அடிக்க போகும் ஆப்பு...


rao
மே 04, 2024 09:16

Sonia Manio contested ,now he wants to gain sympathy by invoking mother name but the results will be different and pappu will loose both in Wayanad and Rae Bareli.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி