உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட டாப் 100 பணக்காரர்கள் பட்டியல்; முதல் இடத்தில் தொடர்கிறார் முகேஷ் அம்பானி!

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட டாப் 100 பணக்காரர்கள் பட்டியல்; முதல் இடத்தில் தொடர்கிறார் முகேஷ் அம்பானி!

புதுடில்லி: போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதல் இடத்தை தக்க வைத்து கொண்டார். அவரது சொத்து மதிப்பு 119.5 பில்லியன் டாலர் ஆக உயர்ந்துள்ளது.அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'போர்ப்ஸ்' பத்திரிகை, இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு: தொழில் அதிபர் முகேஷ் அம்பானி முதல் இடத்தை தக்க வைத்து கொண்டார். அவரது சொத்து மதிப்பு 119.5 பில்லியன் டாலர் ஆக உயர்ந்துள்ளது. கடந்து ஆண்டில் மட்டும் 27.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.* அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி 116 பில்லியன் டாலர் குடும்பச் சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.* ஜிண்டால் குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால் முதல் முறையாக மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். அவரது சொத்து மதிப்பு 43.7 பில்லியன் டாலர் ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவின் பணக்கார பெண்மணி என்ற இடத்தையும் தக்கவைத்துக் கொண்டார்.* ஷிவ் நாடார் 40.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

டாப் 10 பணக்காரர்கள் பட்டியல் விவரம் பின்வருமாறு:

* முதல் இடம்; முகேஷ் அம்பானி- 119.5 பில்லியன் டாலர்,* இரண்டாம் இடம்: கவுதம் அதானி - 116 பில்லியன் டாலர்,* மூன்றாம் இடம்: சாவித்ரி ஜிண்டால் - 43.7 பில்லியன் டாலர்,* நான்காம் இடம்: ஷிவ் நாடார்- 40.2 பில்லியன் டாலர்,* 5ம் இடம்: திலீப் ஷங்வி: 32.4 பில்லியன் டாலர்,* 6ம் இடம்: ராதாகிஷன் தமானி- 31.5 பில்லியன் டாலர்,* 7ம் இடம்: சுனில் மிட்டல்- 30.7 பில்லியன் டாலர்,* 8ம் இடம்: குமார் பிர்லா - 24.8 பில்லியன் டாலர்,* 9ம் இடம்: சைரஸ் பூனவல்லா- 24.5 பில்லியன் டாலர்,* 10ம் இடம்: பஜாஜ் குடும்பம்- 23.4 பில்லியன் டாலர்.இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் சொத்து மதிப்பு ஒரு டிரில்லியன் டாலர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Matt P
அக் 11, 2024 11:29

இந்தியாவிலுள்ள முதல் 100பணக்காரர்களுடைய combined wealthசொத்துக்களை சேர்த்தால் அதன் மதிப்பு இன்றைக்கு 1.1 டிரில்லியன் ஆம். அது 2019 ஐ விட 2 மடங்கு அதிகம் என்பதும் செய்தி.


APR
அக் 11, 2024 00:16

Always Ratan Tata is No.1 in India wealth


Vijay D Ratnam
அக் 10, 2024 23:35

சொம்மா அள்ளிவிடாதீங்கயா, கேக்குறவன் கேனய்யன்னா கருணாநிதிதான் மகாத்மா என்று அடிச்சி உடுவீங்களே. கட்டுமர கம்பெனியை விட பணக்கார கம்பெனியா இந்த ரிலையன்ஸ் கம்பெனி.


Thirumoortthy Moorthy
அக் 10, 2024 19:39

இந்தியாவின் 70% பணம் ஒரு 100 பேரிடம் தான் செல்கிறது என்பதை தான் இது காட்டுகிறது 70% பணம் 1% மக்களிடம் நாடு நல்ல முன்னேற்றம் அடைந்து விடும்


Matt P
அக் 11, 2024 11:36

அரசியல்வாதிகள் தான் அவர்கள் சொத்தின் உண்மையை சொல்வதில்லையே. அவர்கள் பணம் வெ ளிநாடுகளில் பதுங்கி இருக்கலாமே இங்கு யாருக்கும் உதவாமல். வாழ்க்கையில் எல்லோருக்கும் முன்னேற் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. எதுவுமே ஒரு நாளில் நடந்துவிடுவதில்லை. மனநிம்மதி பணத்தாலும் வாய்த்து விடுவதில்லை.


தாமரை மலர்கிறது
அக் 10, 2024 18:48

அடுத்த வருடம் அதானி அம்பானியை தாண்டி செல்வார் என்பதில் சந்தேகமில்லை. இந்திய முதலாளிகள் சக்கை போடு போடுகிறார்கள். பிஜேபியின் இந்தியாவில் பொருளாதார வாளர்ச்சியை இது காட்டுகிறது. ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக்கூடிய விஷயம் இது.


Palanisamy Sekar
அக் 10, 2024 16:34

போச்சுடா இன்னிக்கு பப்புவுக்கு தூக்கமே போயிடும். இன்னும் புலம்புவார். இது பொறாமையின் வெளிப்பாடு, மற்றும் தேர்தல் நிதி எதிர்பார்த்த அளவுக்கு கொடுக்காமல் போனதும் காரணம். செய்திகளில் புலம்பல் ஏகத்துக்கு இருக்கும். ப்ளட் பிரஷர், தூக்கமின்மை, உணவு உட்கொள்ளாமல் தடுமாற்றம், அஜீரண கோளாறு, இப்படி பல வகைகளில் ராகுல்காந்தியின் உடல் நிலை பாதிப்பதற்கு இந்த செய்தியே காரணமாக இருக்கும்.


Lion Drsekar
அக் 10, 2024 15:08

பாராட்டுக்கள், ஒரு இந்தியன் அதுவும் எந்த ஒரு மூலதனமும் இல்லாமல் பதைவியை மட்டுமே வைத்துக்கொண்டு , லஞ்சம் வாங்கி , பினாமி பெயர்களில் சொத்து வாங்கி, மருத்துவக்கல்லூரி, பொறியில் கல்லூரி, வெளிநாட்டில் வியாபாரம் என்று இல்லாமல் ஏதோ ஒரு வியாபாரம் என்று செய்து முன்னுக்கு வருகிறார் என்றால் பாராட்டுக்கள், வந்தே மாதரம்


Anand
அக் 10, 2024 14:49

குடும்பம் இந்த லிஸ்டில் இல்லையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை