உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் 15 பேர் டிஸ்மிஸ்

மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் 15 பேர் டிஸ்மிஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை சொந்த உபயோகத்திற்கு திருடிய 15 விமான நிலைய மூத்த அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். வர்த்தக நகரமான மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையம் எப்போதும் பரபரப்பு நிறைந்தது. வியாபார விஷயமாக மட்டும் அல்லாது சொந்த அலுவல்கள் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து விமானங்கள் மூலம் பல்வேறு நகரங்கள், நாடுகளுக்கு பறக்கின்றனர். அதேபோல ஆயிரக்கணக்கானோர் மும்பைக்கு வந்தும் செல்கின்றனர்.இந் நிலையில் விமான நிலையம் வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதித்து அனுப்புவது வழக்கம். அத்தகைய தருணங்களில் பாதுகாப்பு நடவடிக்கையாக எண்ணெய் பாட்டில்கள், தேங்காய்கள்,மிளகாய் பொடி பாக்கெட்டுகள், பொம்மைகள், சிகரெட் லைட்டர்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.அவை அனைத்தையும் அழிப்பதற்காக அங்குள்ள அறைகளில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. இந்த பொருட்களை விமான நிலைய மூத்த அதிகாரிகள் பலர் தங்கள் சொந்த உபயோகங்களுக்கு திருடிச் சென்றிருக்கின்றனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்ட போது இந்த நூதன திருட்டைக் கண்டுபிடித்த மேலதிகாரிகள் இதில் ஈடுபட்ட 15 பேரை பணிநீக்கம் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Natarajan Ramanathan
செப் 09, 2025 21:07

திருடுவது சிலர் ரத்தத்திலேயே இருக்கிறது. பஞ்சாயத்து தலைவராக பதவியில் இருப்பவரே பதினைந்து ஆண்டுகளாக திருடுவதாக சொல்கிறார். திருடுபவரின் வலக்கரத்தை வெட்டினால் மட்டுமே இது குறையும் .


D.Ambujavalli
செப் 09, 2025 18:33

மிளகாய்ப்பொடி, hair oil , ஷாம்பு கைப்பற்றி வைக்கப்படும் இடங்களில் மட்டும் தான் CCTV கேமரா இருக்குமா? ‘பெரிய’ ஐட்டங்களெல்லாம் காமிரா ஏரியாவை அடையுமா அல்லது அதற்கு முன்பே பயணிகளுடன் deal பேசி விடுவிக்கப்படுமா? தங்கம் திருடியவன் பாதுகாப்பாக இருக்க, இரண்டு நாள் குழம்பு ரசத்துக்கான பொடிகளும் , நாலு நாள் தேய்த்துக்கொள்ளும் எண்ணெயும்தான் பிடிபடுமா? 20 ரூபாய் pick பாக்கெட்டுக்கு 6 மாத சிறையாம், அதுபோல இருக்கிறது இந்த டிஸ்மிஸ் நடவடிக்கை


Premanathan S
செப் 09, 2025 17:47

இந்திய அரசு எவ்வளவு பெரிய குற்றம் செய்தாலும் அதிக பட்ச தண்டனை பணியிடைேநீக்கம் தான் கொடுப்பது வழக்கம்


V.Mohan
செப் 09, 2025 16:52

இந்த சில்லறை சமாச்சாரத்திற்காக டிஸ்மிஸ் செய்து இருக்க மாட்டார்கள். தங்கமும் போதை அயிட்டங்களை தான் இருக்கும், என்று இந்த திராவிட கருணா கும்பல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்ததோ அன்னைக்கு முதல் லஞ்சம் வாங்கி சம்பாதிக்கறவன் சாமர்த்தியக்காரன் லஞ்சம் கொடுத்து காரியம் செய்துக்கிறவன் திறமைசாலி என்று பெயர் தந்தார்கள். ஆட்சியில் இருக்கிறவர்கள் லஞ்சம் வாங்குவதாலும், கீழாய் உள்ளவர்கள் அதை எழுதப்படாத சட்டமாக ஆக்கிவிட்டார்கள். ஜனங்களுக்கும் லஞ்சம் வாங்குகிற ஆசாமிகள் வேணும், அதிகாரிகளுக்கும் லஞ்சம் தருகிறவர்கள் அதை தப்பு என நினைக்காதவர்களாக இருக்கவேணும். எனவே மக்கள் தகுதிக்கு ஏற்பவே ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அமைகிறார்கள். மக்கள் இது தப்பு என்று உணராதவரை லஞ்சம் ஒழியாது.


Premanathan S
செப் 09, 2025 21:23

உண்மைதான் லஞ்சம் கொடுத்து தவறான வழியில் அல்லது விரைவாக காரியம் ஆகவேண்டும் என்று நினைக்கிற மக்கள் மாறாதவரை நாடு, முன்னேற்றம் , நல்லரசு, வல்லரசு எல்லாம் கனவில் தான் இருக்கும்


visu
செப் 09, 2025 16:01

லட்ச கணக்கில் ஊதியம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு சில சில்லறை இலவசங்களை அனுபவித்தாள் தான் ஆத்ம திருப்தி இப்படி திருடி மாட்டிக்கிட்டாங்க


K.n. Dhasarathan
செப் 09, 2025 12:24

ஐயா இங்கு சென்னை ஏர் போர்ட்லே சுங்க துறை அதிகாரிகளே தங்கம் கடத்தி வர துணை செய்திருக்கிறார்கள், பதிலாக தங்கம் கமிஷன் பெற்று இருக்கிறார்கள், அதனால்தான் தினமும் செய்திகள் வந்தன, ஆனால் இங்கு நடவடிக்கை கண் துடைப்பு தான், மூன்று நாளில் அதே அதிகாரிகள் அதே வேலைகளை திரும்ப தொடர்கிறார்கள், என்ன செய்யலாம்? மொத்தமாக டிஸ்மிஸ் செய்து விட்டு, சொத்துக்களை முடக்கி, தங்கத்தை கைப்பற்றி வழக்கு போட்டு நிரூபித்து விட்டு வாருங்கள், என்று சொல்ல நல்ல அதிகாரி யாருமே இல்லையா? பல நுறு கோடிகள் நாட்டுக்கு நஷ்டம் செய்தார்களே, இவர்களை தூக்கில் போடாமல் அரசுக்கு பணம் திரும்ப வழி உண்டா? நீதி துறையும் காவல் துறையும் தான் பதில் சொல்லி நடவடிக்கை எடுத்து காட்டணும், இல்லையெனில் மக்கள் நம்ப மாட்டார்கள்


kannan sundaresan
செப் 09, 2025 12:19

மிளகாய் பொடி பாக்கெட், தேங்காய் எண்ணை பாட்டில் இதெல்லாம் சாதாரனம். தங்கத்தையே கடத்துவதாக சொல்கிறார்கள். இது உண்மையாதானா?


Ganapathy Subramanian
செப் 09, 2025 10:59

நமது முன்னாள் ஜனாதிபதி திருமதி பிரதிபா பாட்டில் அவர்கள் ராஷ்ட்ரபதி பவனில் இருந்த அத்தனை சாமான்களையும் எடுத்துக் கொண்டு சென்றதாக படித்ததுண்டு. நாட்டின் முதல் குடிமகளே அப்படிப்பட்டவர்களாக இருக்கும்போது தான் செய்தால் என்ன தவறு என்று நினைப்பவர்கள் இருப்பதும் நியாயம்தானே?


Premanathan S
செப் 09, 2025 13:10

உண்மைதான் லஞ்சம், ஊழல் இது எல்லாம் இந்தியர்களின் டி என் ஏ வில் ஊறி உள்ள விஷயம் மாற்ற இயலாது இது ஒரு பிழைக்கத் தெரியாத இந்தியனின் கணிப்பு தவறாயிருந்தால் மன்னிக்கவும்


தமிழ்வேள்
செப் 09, 2025 10:52

பரிமுதலான பொருட்களின் ரசீது மற்றும் டிக்கெட் நகல் மூலம், அங்கீகாரம் பெற்ற உறவினர், நண்பர் அல்லது ஊழியர் ஒரு சிறு கட்டணம் செலுத்தி திரும்ப பெறும் வசதி செய்யலாமே? அரசுக்கு வருமானமும் வரும் ..குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திரும்ப பெறாத பொருட்களை ஏலம் விடலாம் அல்லவா ?


Kannan
செப் 09, 2025 10:47

டிஸ்மிஸ் மிக அதிக பட்சமாக தெரிகிறது. அதற்கு பதில், அவர்களது குற்றத்தை அவர்களின் போட்டோவோடு விளம்பர படுத்தி, குடும்பத்தினர் பொது மக்கள் முன்னிலையில் தவறை உணர செய்யலாம்


theruvasagan
செப் 09, 2025 16:11

தங்க கடத்தல் குருவிகள் மூலம் எவ்வளவு தங்கம் உள்ளே வருகிறது. கடமை செய்ய தவறியவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு யாரையும் டிஸ்மிஸ் செய்ததாக செய்திகள் வருவதில்லையே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை