உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பை மோனோ ரயில் சோதனை ஓட்டம் சொதப்பல்

மும்பை மோனோ ரயில் சோதனை ஓட்டம் சொதப்பல்

மும்பை: மும்பையில், நேற்று நடந்த, 'மோனோ' ரயில் சோதனை ஓட்டத்தின் போது, ரயில் தடம் புரண்டு இரும்பு துாணில் மோதி சேதமடைந்தது. மஹாராஷ்டிராவின் மும்பையில், நாட்டின் முதல், 'மோனோ' ரயில் திட்டம் துவங்கப்பட்டது. இதை மஹா மும்பை மோனோ ரயில் போக்குவரத்து நிறுவனம் இயக்குகிறது. மோனோ ரயில் என்பது குறுகிய பாலத்தில் செல்லக்கூடியது. பாலத்தின் பக்கவாட்டில் உரு ளையான கம்பம் அமைக்கப்பட்டு, அதை மோனோ ரயிலின் சக்கரங்கள் தழுவியபடி நகரும். பார்ப்பதற்கு ரயில் தொங்கியபடி செல்வது போல் இருக்கும். இங்கு, 2014ல் முதற்கட்ட மோனோ ரயில் சேவை பயன்பாட்டுக்கு வந்தது. 2019ல் செம்பூர் முதல் சந்த் கார்கே மஹாராஜ் சவுக் வரை 20 கி.மீ., துாரத்திற்கு முழு சேவையும் துவங்கியது. கடந்த சில மாதங்களாக மும்பை மோனோ ரயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக அடிக்கடி தடைபட்டது. ஆகஸ்ட் 19 மற்றும் செப்டம்பர் 15 தேதிகளில் பல இடங்களில் மோனோ ரயில் நடுவழியில் நின்றது. நுாற்றுக்கணக்கான பயணியர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் செப்டம்பர் 20 முதல் மும்பையில் மோனோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், நான்கு பெட்டிகள் உடைய, 10 மோனோ ரயில்களை புதிதாக மஹா மும்பை மோனோ ரயில் நிறுவனம் வாங்கியது. அதில் ஒரு ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று காலை 9:00 மணிக்கு வடாலா பணிமனையில் இருந்து துவங்கியது. அங்கிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மோனோ ரயில் தடம் புரண்டு அந்தரத்தில் தொங்கியது. இதில் முதல் பெட்டி கடுமையாக சேதமடைந்தது. இதில் மூன்று ஊழியர்கள் காயமடைந்தனர். ரயிலில் பயணியர் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anbuselvan
நவ 06, 2025 12:31

சோதனை ஓட்டம் நடத்தப்படுவதே பிற்காலத்தில் உண்மையான பயன்பாட்டின் போது ரயிலின் ஓட்டம் பாதுகாப்பாக இருக்கணும் என்பதற்காகத்தான். ஏதோ ஒரு குறை ஏற்பட்டு உள்ளது அதை ஆராய்ந்து, சரி செய்து ஒன்றுக்கு இரண்டாக சோதனை செய்து பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு விதுவதுதான் ஒரு சிறந்த பரிசோதனை மற்றும் நடைமுறை. இதில் குறை கூற ஒன்றுமே இல்லை.


Manalan
நவ 06, 2025 10:19

mono rail is failure model.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 06, 2025 07:47

இப்படி கோவிந்தா கோ-விந்தா ஆயிடிச்சி


ஜெய்ஹிந்த்புரம்
நவ 06, 2025 07:45

எத்தனை நூறு கோடி கொள்ளையடிச்சானுங்களோ


Ramesh Sargam
நவ 06, 2025 07:31

ஊழல். சீனா நமக்கு எதிரியாக இருந்தாலும், அவர்கள் வளர்ச்சிக்கு முன்பு நாம் மிகவும் கம்மிதான். போனவாரம் சீனாவில் மணிக்கு 800 km வேகம்/ தூரம் செல்லும் அதிவிரைவு புல்லட் ரயில் விட ஆயத்தமாகி இருக்கின்றனர். இப்பொழுது உள்ள ரயில்கள் மணிக்கு 600 km வேகம்/ தூரம் செல்லும் அதிவிரைவு புல்லட் ரயில் இருக்கிறது சீனாவில்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை