உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பை டூ நியூயார்க் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; டில்லியில் அவசர தரையிறக்கம்

மும்பை டூ நியூயார்க் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; டில்லியில் அவசர தரையிறக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மும்பையில் இருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்த, ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.மும்பையில் இருந்து அதிகாலை 2 மணியளவில் ஏர் இந்தியா விமானம் நியூயார்க் புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில், பறந்து கொண்டிருந்த போது வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பயணிகளின் பாதுகாப்பு கருதி, விமானம் டில்லிக்கு திருப்பி விடப்பட்டது. இதையடுத்து, பத்திரமாக டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v0m7k0lt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விமானத்தில் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில், சந்தேகப்படும் வகையில் எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். பயணிகள் அனைவருக்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என விமான நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

பாமரன்
அக் 14, 2024 13:12

மும்பையில் இருந்து நியூயார்க் போக இந்த ரூட்டே கிடையாதே... வழியில் துபாய் மாதிரி விமான பெரிய விமான நிலையங்கள் இருக்குறப்போ ஏன் பொள்ளாச்சி போயி புளியம்பட்டி போயிருக்கு... ம்ம்ம்ம்ம்


inamar
அக் 14, 2024 13:00

இது போன்று மிரட்டல் விடும்


Ramesh Sargam
அக் 14, 2024 12:42

மத்தியில் சிறப்பாக ஆளும் பாஜக அரசை கவிழ்க்க இப்படி வெடிகுண்டு மிரட்டல், ரயில் தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர் வைத்தல், ரயில்களை கவிழ்க்க சதிச்செயலில் ஈடுபடுதல் மற்றும் பல நாசவேலைகளை செய்வது வேறு யாருமல்ல. நம் நாட்டில் உள்ள தேச துரோக அரசியல்கட்சியினர் மற்றும் அவர்கள் பால் கொடுத்து வளர்க்கும் வெளிநாட்டு விஷப்பாம்புகள். அவர்கள் எல்லோரையும் நசுக்கவேண்டும், நிம்மதி வேண்டுமென்றால்.


ரெட்டை வாலு ரெங்குடு
அக் 14, 2024 10:08

கள்ளக்குடியேறிகளின் கைவரிசை. இவர்களின் கொட்டத்தை அடக்க சர்வாதிகாரமே சிறந்த உபாயம். எல்லைமீறுபவனை சரமாரியாக அவனின் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து அதன் பின்னணியை ஆராய்ந்து அந்த திருட்டுப்புத்தி அரசியல் கட்சிக்கு பூட்டு போடவேணும் . ஒரு முடிவுகட்ட சவுதியில் உள்ளது போல நாசக்காரர்களின் கொட்டத்தை அடக்க தண்டனை இருக்கவேணும். இல்லையேல் இந்த பிரச்சனை தொடர்கதை யாகிவிடும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை