உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தனிக்கொடி கேட்கும் நாகா குழு: ஆயுதம் ஏந்துவோம் என எச்சரிக்கை

தனிக்கொடி கேட்கும் நாகா குழு: ஆயுதம் ஏந்துவோம் என எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவஹாத்தி: 'நாகாலாந்துக்கு தனிக்கொடி மற்றும் அரசியலமைப்பு கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால், 27 ஆண்டு போர் நிறுத்த முடிவை கைவிட்டு மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்' என, மத்திய அரசுக்கு என்.எஸ்.சி.என்., - ஐ.எம்., என்ற நாகா கிளர்ச்சிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்றும், அதை தனி நாடாக அறிவிக்க கோரியும், என்.எஸ்.சி.என்., - ஐ.எம்., எனப்படும், நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் - இசாக் முய்வா உட்பட பல்வேறு கிளர்ச்சிக்குழுக்கள் கோரி வருகின்றன. இது தொடர்பாக, கிளர்ச்சி குழுவினருக்கும், ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்து வந்தது. கடந்த 1997ல் என்.எஸ்.சி.என்., - ஐ.எம்., போர் நிறுத்தத்தை அறிவித்தது. திமாபுரில் உள்ள ஹெப்ரான் என்ற இடத்தில் முகாம் அமைத்து என்.எஸ்.சி.என்., - ஐ.எம்., குழுவினர் அங்கு தனி ராஜ்ஜியம் நடத்தி வருகின்றனர். அந்த குழுவின் தலைவர் இசாக் முய்வாவை, இவர்கள் பிரதமர் என்றே அழைக்கின்றனர். 1997க்கு பின், அரசு தரப்புக்கும், என்.எஸ்.சி.என்., - ஐ.எம்., குழுவுக்கும் இடையே, 600 சுற்று பேச்சு நடந்தன. அதன் முடிவில், 2015, ஆக., 3ல் மத்திய அரசுக்கும், கிளர்ச்சி குழுவுக்கும் இடையே உடன்படிக்கை கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி, நாகாலாந்தின் தனித்துவமான வரலாறு பகிரப்பட்ட இறையாண்மையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு ஒப்புக் கொண்டதாக இசாக் முய்வா தெரிவித்தார். இவர்கள் கோரும் தனி நாகாலாந்து கொடி மற்றும் அரசியலமைப்பு என்ற கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துள்ளது. ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டதை இப்போது ஏற்க மறுப்பது துரோகம் என குற்றஞ்சாட்டும் நாகா கிளர்ச்சியாளர்கள், இந்த விவகாரத்தில் அரசியல் தீர்வு காண மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை கோருகின்றனர்.ஏற்க தவறினால், 27 ஆண்டு போர் நிறுத்தத்தை திரும்ப பெற்று மீண்டும் ஆயுதம் ஏந்துவோம். பின்விளைவுகளுக்கு மத்திய அரசு தான் பொறுப்பு என, எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Dhanalakshmi Senthilkumar
நவ 11, 2024 10:08

இதில் தவறு ஒன்றும் இல்லை இந்தியாவில் உள்ள மாநிலங்களால் அனைத்தும் வெவ்வேறு மொழி கலாச்சாரம் பண்பாடு உடையவை அந்தந்த மாநிலத்தின் மொழி கலாச்சார உணர்வுகளை மதிக்க வேண்டும் இருக்க முடியும் இந்தியா ஒரே நாடு அல்ல பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் இதுபோல ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக கொடிகள் ஒதுக்கலாம்


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 11, 2024 13:31

அப்படியே ஒவ்வொரு மாநிலத்தையும் தனி நாடாக அறிவித்து விடலாம். தனித்தனி தேசிய கீதம் வைக்கலாம். மாநிலம் விட்டு மாநிலம் செல்ல பாஸ்போர்ட் விசா வைக்கலாம். முதலமைச்சர்கள் பிரதம மந்திரி ஆகலாம். மாவட்டங்களுக்கு முதலமைச்சர்கள் பதவி கொண்டு வரலாம். பின்னர் இன்னொரு 50 வருடங்கள் கழித்து அந்த அந்த மாவட்டங்களை தனி நாடாக அறிவித்து அதற்கு தனி கொடி தேசிய கீதம் கொண்டு வரலாம். பிறகு முதலிருந்து மீண்டும் படிக்கவும்.......


MUTHU
நவ 10, 2024 13:00

சீமான், புதிதாய் வந்துள்ள விஜய் போன்றோர், ஆண்டாண்டு காலமாய் ஆட்சி நடத்தும் திக திமுக அதிமுக போன்றோர் இதை போன்ற கொள்கைகளினால் தான் தமிழகத்தை கட்டமைத்துள்ளனர் அல்லது உருவாக்க முயல்கின்றனர். மாநிலத்திற்கு ஒரு கூட்டம் இப்படி இயங்கி கொண்டுள்ளது. இதில் நாகா குழு ஒன்றும் புது கொள்கையுடன் வந்துவிடவில்லை.


தமிழ்வேள்
நவ 10, 2024 10:25

தேசிய மதம் என்பது இயற்கைப் பாதுகாப்பு. ஹிந்து ஜைனம் சீக்கியம் ஃபார்ஸி ஆகியவற்றை பாரத தேசிய மதங்கள் ஆக அறிவிக்க வேண்டும். மொழிவாரி மாநிலப் பிரிவுகள் கலைக்கப்பட்டு மாநில மறுசீரமைப்பு முக்கியம். ஒற்றை மொழி ஆதிக்கம் இன்றி இரண்டு அல்லது மூன்று மொழிகள் இருக்கும் படியாக பிராந்திய பிரிவு முறை வேண்டும். இந்தியா முழுமைக்கும் 12 பிராந்தியங்கள்போதுமானது.. இல்லை என்றால் ஒரே மொழி பேசும் ஒற்றை மாநிலம் இரண்டு அல்லது மூன்று ஆக பிரிக்கப்பட வேண்டும்.. இல்லை என்றால் பிரிவினை வாத இயக்கங்கள் வளரும்...


நிக்கோல்தாம்சன்
நவ 10, 2024 07:52

இது வெளிநாட்டு சதி என்றுதான் நான் நம்புகிறேன்


SUBBU,MADURAI
நவ 10, 2024 11:00

Deep state led interventions in Nagaland and manipur needs urgent course correction.


GMM
நவ 10, 2024 07:21

நாக ஆயுத குழுவின் படி, நாக இந்தியாவின் ஒரு பகுதியில்லையாம். பின் இந்தியாவிடம் தனி கொடி, தனி சாசனம் ஏன் கேட்க வேண்டும்?. அது இந்திய பகுதி. பிரிவினை கோஷம். ஒன்றுபட்டு வாழு. அல்லது ஆய்தம் எந்தி மடிய வேண்டும். இனி பழைய பாரதம் உருவாகும் காலம். உலக நாடுகள் பிரிவினை வாதிகளை அழிக்க வேண்டும். அங்கீகரிக்க கூடாது. பாக், ஆப்கான்.. போன்ற அங்கீகாரம் ரத்து செய்ய வேண்டும். இந்தியாவில் இணைக்க வேண்டும். அதிக அக்னி வீர், பெண் பிரிவு உருவாக்க வேண்டும்.


Devaraju
நவ 10, 2024 08:14

Well said ?


Kasimani Baskaran
நவ 10, 2024 06:43

இவர்களுக்கு ஒரு முடிவு கட்டவேண்டியது அவசியம்.


Svs Yaadum oore
நவ 10, 2024 06:41

இந்த தனிக்கொடி கேட்கும் நாகா குழு வுக்கும் மணிப்பூர் பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்?? .... மணிப்பூர் மணிப்பூர் என்று கூவும் சமூக நீதி மத சார்பின்மை விடியல் திராவிடங்க .


Svs Yaadum oore
நவ 10, 2024 06:28

இதன் பின்னணியில் மதம் மாற்றிகள் ..எங்கெல்லாம் மதம் மாற்றம் நடக்குதோ அங்கெல்லாம் இது போன்ற பிரச்சனை ஆரம்பம் ....


Dharmavaan
நவ 10, 2024 08:07

மத அற்ற தடை சட்டம் தேவை இல்லையேல் இந்தியா துண்டாகும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை