உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாளந்தா பல்கலை., புதிய வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி: 17 நாடு தூதர்கள் பங்கேற்பு

நாளந்தா பல்கலை., புதிய வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி: 17 நாடு தூதர்கள் பங்கேற்பு

பாட்னா: பீஹார் மாநிலம் ராஜ்கிரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை இன்று(ஜூன் 19) பிரதமர் மோடி திறந்து வைத்தார். மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பீஹார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், 17 நாடுகளின் தூதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=naa8sys1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பீஹார் மாநிலம் ராஜ்கிரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தில் ரூ.1700 கோடி மதிப்பில் புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை இன்று( ஜூன் 19) பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பீஹார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், 17 நாடுகளின் தூதர்கள், பல்கலை., பேராசிரியர் அபய் குமார் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்கலை., பேராசியர்களுடன் பிரதமர் மோடி குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். பின்னர் அவர், பல்கலை., வளாகத்தில் மரக்கன்றை நட்டார். இது தொடர்பாக, எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாளந்தா பல்கலை., நமது புகழ்பெற்ற கடந்த காலத்துடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. இளைஞர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்தப் பல்கலைக்கழகம் நிச்சயமாக நீண்ட தூரம் செல்லும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வரலாறு

விழாவில் பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் பேசியதாவது: பிரதமர் மோடியை நான் வரவேற்கிறேன். அவருக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். நாளந்தா பல்கலைக்கழகம் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளது. பழைய நாளந்தா பல்கலைக்கழகத்தில் சுமார் பல ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்றனர். சுமார் 2 ஆயிரம் ஆசிரியர்கள் பணி புரிந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

நவீன முறை

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: அறிவு மற்றும் கல்விக்கான உலகளாவிய மையமாக இந்தியா மாற வேண்டும். இன்று, 23 ஐஐடிகள் உள்ளன. நாட்டில் 13 ஐஐஎம்கள் மட்டுமே இருந்தன. இப்போது இந்த எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. நாளந்தா பல்கலைக்கழகம் என்பது இந்திய வரலாற்றின் மறுமலர்ச்சி மட்டுமல்ல, பல ஆசிய நாடுகளின் பாரம்பரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நாளந்தா பல்கலைக்கழகத்தின் இந்த புதிய வளாகத்தில், ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இளைஞர்கள் கல்வி கற்க வருகிறார்கள். நவீன முறையில் வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 19, 2024 21:46

ஆமாம் அது என்ன அண்ணிய என படையெடுப்பு ஆப்கானிஸ்தானத்தில் வந்த படையெடுப்புன்னு சொல்ல வேண்டியதுதானே ஏன் பயமா?


Indhuindian
ஜூன் 19, 2024 15:49

இது தான் டபுள் என்ஜின் சர்க்காரோட ஆதாயம். அங்கே நாலந்தா மாதிரி இங்கே காஞ்சிபுரம் கூட அப்போ படிப்பின் தலைநகரமாக தென்னிந்தியாவில் இருந்தது அதை புதுப்பிக்க திராவிட மாடல் எந்த முயற்சியும் எடுக்காது ஏன்னா அது வந்தேறிகளுக்கு சாதகமா இருக்கும் அதனால் அப்படியே கமுக்கமா இருக்காங்க இருந்தாலும் மோடி சர்க்கார் அந்த பெருமையை மீட்டெடுக்க வேண்டும்


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 19, 2024 14:23

உலக குரு பாரதம்.. நாளந்தா பெயர் பெற்று விளங்கிய பொழுது பல நாடுகளில் மனித நாகரிகமே முதிர்ச்சி அடையவில்லை .....


Suppan
ஜூன் 19, 2024 14:13

இந்தப் பல்கலைக் கழகத்தை எரித்த அந்தக்கயவன் பக்தியார் கில்ஜி பெயரில் உள்ள ரயில் நிலையத்தை பக்தியார்புர் பெயரையும் மாற்ற வேண்டும். இந்தி கூட்டணிக் களவாணிகள் கதறுவார்கள். கதறட்டும்


N SASIKUMAR YADHAV
ஜூன் 19, 2024 11:49

எங்க திராவிட மாடல் தலைவர் குடிமக்கள் கஷ்டப்பட கூடாது என்பதற்காக இந்நேரம் 10 வெளிநாட்டு சாராய கடைகளை திறக்க முயற்சி எடுத்திருப்பார்


Sampath Kumar
ஜூன் 19, 2024 11:38

அய்யா ஜி அழிந்து போன எங்கள் யாழ் பல்கலையை திறக்க முடியுமா?


hari
ஜூன் 19, 2024 14:48

உன் கட்டுமர தலைவனை போய் கேளு சம்பத்து.....


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ