உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழிலும் பெயர் பலகை வக்கீல் ஜோதிபாசு அழைப்பு

தமிழிலும் பெயர் பலகை வக்கீல் ஜோதிபாசு அழைப்பு

தங்கவயல்: ''தங்கவயலில் கன்னடத்துடன் தமிழிலும் பெயர் பலகை வையுங்கள்,'' என்று வக்கீல் ஜோதிபாசு வேண்டுகோள் விடுத்தார்.தங்கவயல் வக்கீல்கள் சங்க முன்னாள் பொதுச் செயலர் ஜோதிபாசு நேற்று அவர் அளித்த பேட்டி:கர்நாடகத்தில், பெயர் பலகைகள் அனைத்திலும் 60 சதவீதம் மாநில மொழி கன்னடத்தில் தான் இருக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். அதனை வரவேற்கிறோம். 40 சதவீதம் அவரவர் விரும்பும் மொழியில் பெயர் பலகை இருக்கலாம் என்பதை அவர் அறிவித்துள்ளார்.எனவே, தமிழர் நிறைந்த தங்கவயலில், கன்னடத்துடன் தாய் மொழியான தமிழிலும், உலக பொது மொழியான ஆங்கிலத்திலும் பெயர் பலகை வைத்துக் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இது மாநில முதல்வரின் மொழிகளின் நல்லிணக்கத்தை காட்டுகிறது.எனவே, தங்கவயலில் கன்னடத்துடன், தமிழ், ஆங்கிலம் என மும்மொழியில் பெயர் பலகை வையுங்கள். இந்த மும்மொழிக்கு எதிராக இனி எந்த சக்தி வந்தாலும் சட்ட ரீதியாக சந்திக்கலாம். நானும் எனது அலுவலக பெயர் பலகையில் கன்னடத்துடன் தமிழும் இடம்பெற செய்துள்ளேன்.தமிழர்களே, நீங்கள் உங்களின் கடைகள், வர்த்தக, தொழில் நிறுவனங்கள், எதுவாக இருந்தாலும் கன்னடத்துக்கு 60 சதவீதம் இடம் அளித்து தமிழையும் இடம் பெற செய்யுங்கள்.சட்டத்தில் சிறுபான்மை மொழிக்கு உரிய பாதுகாப்பு உண்டு. அதனை நாம் பயன்படுத்துவோம். தங்கவயலில் 1982க்கு பிறகு சிறுபான்மை மொழியான தமிழ் வளர்ச்சி குன்றி வருகிறது. நமது பாரம்பரிய வரலாறு மெல்ல அழிந்து விடும் போல் உள்ளது.பிற மாநில தமிழர், தமிழர் நலனுக்காக தமிழக அரசு தனி வாரியம் அமைந்துள்ளது. கர்நாடக தமிழர் நலனுக்கும் தமிழக அரசு உதவிட முன் வரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை