| ADDED : ஏப் 30, 2025 01:33 PM
புதுடில்லி: பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசனை அமைப்பை மத்திய அரசு மாற்றி அமைத்தது.காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இன்று டில்லியில் மத்திய அமைச்சரவை குழுவிடம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9elixfg0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசனை அமைப்பை மத்திய அரசு மாற்றி அமைத்தது. தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராக 'ரா' உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகள் 7 பேரைக் கொண்ட புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. குழுவில், முன்னாள் மேற்கு விமானப்படை தளபதி ஏர் மார்ஷல், முன்னாள் தெற்கு ராணுவ தளபதி ஏ.கே. சிங், ஓய்வு பெற்ற அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.