உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் அசைவம் சாப்பிட்டாரா? எம்.எல்.ஏ., பேச்சால் சர்ச்சை!

ராமர் அசைவம் சாப்பிட்டாரா? எம்.எல்.ஏ., பேச்சால் சர்ச்சை!

ஷீரடி, ''ராமர், 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தபோது மிருகங்களை வேட்டையாடியவர். எனவே, அவர் அசைவ உணவு பழக்கம் உடையவராக தான் இருந்திருக்க முடியும்,'' என, சரத் பவார் பிரிவைச் சேர்ந்த தேசியவாத காங்., - எம்.எல்.ஏ., ஜிதேந்திர அவாத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மஹாராஷ்டிராவின் அஹமத்நகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடியில் நடந்த கூட்டத்தில், சரத் பவார் பிரிவைச் சேர்ந்த தேசியவாத காங்., - எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான ஜிதேந்திர அவாத் பேசியதாவது:ராமர் பகுஜன் எனப்படும் பெரும்பான்மை பிரிவை சேர்ந்தவர். வேட்டையாடி உண்ணும் இனத்தைச் சேர்ந்தவர். அவர் சைவ உணவு பழக்கம் கொண்டவராக இருந்திருக்க முடியாது. காட்டில் 14 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவருக்கு சைவ உணவு மட்டுமே கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அவரை பின்பற்றி தான் நாங்கள் ஆட்டுக்கறி சாப்பிடுகிறோம். பா.ஜ., தங்கள் சுய லாபத்திற்காக, ராமரை சைவ உணவு பழக்கம் உடையவராக சித்தரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.இந்த கூட்டத்தில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரும் இருந்தார். அவரது கட்சி எம்.எல்.ஏ.,வின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள அஜித் பவார் பிரிவை சேர்ந்த தேசியவாத காங்., நிர்வாகிகள், இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, எம்.எல்.ஏ., ஜிதேந்திர அவாத் வீட்டின் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அவாத் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யும்படி, பா.ஜ., - எம்.எல்.ஏ., ராம் கதம், மும்பை காட்கோபர் போலீஸ் ஸ்டேஷனில் மனு அளித்துள்ளார். இதற்கிடையே, எம்.எல்.ஏ., ஜிதேந்திர அவாத் நேற்று கூறுகையில், ''புரிதல் இன்றி நான் இவ்வாறு பேசவில்லை. வரலாற்றை திரிப்பது நோக்கமல்ல. என் பேச்சு யரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறேன்'' என, தெரிவித்தார்.தவறான தகவல்!ஜிதேந்திர அவாத் பேசியது முற்றிலும் தவறானது. வனவாசத்தின் போது ராமர் அசைவ உணவு உண்டார் என, எந்த குறிப்புகளிலும் இல்லை. அவர் காட்டில் பழங்களை மட்டுமே உணவாக உண்டார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.இவரைப் போன்ற பொய்யர்களுக்கு ராமரை இழிவுபடுத்த உரிமை இல்லை. ஆச்சார்யா சத்யேந்திர தாஸ்ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா தலைமை பூசாரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Krishnamurthy Venkatesan
ஜன 05, 2024 18:03

நமக்குள்ளேயே எதிரிகள் இருக்கிறார்கள். முனிவர்களையும் அவர்களின் தவம் மற்றும் யாகங்களையும் காப்பதற்காகவே ராமர் அரக்கர்களை வேட்டையாடினார்.


Arasu
ஜன 05, 2024 16:33

உண்மைய சொன்னா எப்பவும் பிரச்சன்னை தான்....


mukundan
ஜன 05, 2024 15:38

நான் ஒரு ஹிந்து மற்றும் மாமிசம் சாப்பிடுபவன். தீவிர மத நம்பிக்கை உடையவன். இந்த கருது தவறு போல எனக்கு தெரியவில்லை. வேட்டையாடுவது அரச வம்சத்தில் பிறந்த அனைவரும் செய்யவேண்டிய ஒரு கலை. அது தான் அவர்களின் போர் பயிற்சிக்கு உதவும். வேட்டையாடும் உயிரை உண்பது தான் சிறந்தது. சைவம் என்ற கொள்கை சங்கராச்சாரியார் அவர்களுக்கு பின் தான் தீவிரமாக பின்பற்றப்படுகிறது. இன்றும் வங்கத்தில் உள்ள பிராமணர்கள் மீன் சாப்பிடுவர். மாமிசம் சாப்பிடுவது ஒன்றும் பாவம் இல்லை அதுவும் ஒரு தர்மமே.


vbs manian
ஜன 05, 2024 10:10

ராமர் கோவில் வரும் இந்த நேரத்தில் எதையாவது சொல்லி அந்த நிகழ்ச்சியை சிறுமை படுத்த ஒரு கூட்டம் தயாராக உள்ளது.


Sampath Kumar
ஜன 05, 2024 10:08

இவர் சொன்னதில் தவறு இல்லை


ரமேஷ்VPT
ஜன 05, 2024 02:53

இதுவா உங்களுக்கு ரொம்ப முக்கியம், ராமர் சைவம் சாப்பிட்டாரா, அசைவம் சாப்பிட்டாரானு ஆராய்ச்சி பண்றயே இது உனக்கு தேவையா? வீணாக ஹிந்துக்களிடையே பிரிவினையை உண்டுபண்னாதே. அந்தக்காலம் தொட்டு இந்தக்காலம் வரை வரலாற்றில் ஏதாவது பிழைகள் இருந்தால் அதை திரித்து எழுதியிருப்பார்கள், ஆனால் அதில் உள்ள நல்ல சாராம்சங்களை மட்டும் எடுத்துக்கொள். நதி மூலம் ரிஷி மூலம் பற்றி பேசவே கூடாது ஏனென்றால் அதை நான் இங்கு சொல்ல விரும்பவில்லை. உனக்கு தெரியலைன்னா தெரிந்த யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ