தேசியம் பேட்டி
அக்கறை இல்லை!ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்தும்படி, டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு மத்திய அரசு பல முறை கடிதம் எழுதியது. மது விற்பனையில் மட்டுமே ஆர்வமாக உள்ள ஆம் ஆத்மி அரசுக்கு, மக்கள் நலனில் துளிகூட அக்கறை இல்லை.மன்சுக் மாண்டவியாமத்திய அமைச்சர், பா.ஜ.,காட்டாட்சி நடக்கிறது!டில்லி காவல் துறை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், டில்லியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பல இடங்களில் கொலை போன்ற குற்றங்கள் நடக்கின்றன. இதுபோன்ற காட்டாட்சியை டில்லி மக்கள் இதற்கு முன் பார்த்ததில்லை.அரவிந்த் கெஜ்ரிவால்தேசிய ஒருங்கிணைப்பாளர், ஆம் ஆத்மிவீணாகும் வரிப்பணம்!பார்லிமென்டை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முடக்குவதால், மக்களின் கோடிக் கணக்கான வரிப்பணம் வீணாகிறது. விவாதம் எனக்கூறி, கூச்சல் குழப்பத்தை எதிர்க்கட்சியினர் உருவாக்குகின்றனர். நாகரிகமான முறையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.அருண் கோவில்லோக்சபா எம்.பி., - பா.ஜ.,