உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

ஊழலில் திளைத்தவர்கள்!நாட்டிலேயே ஊழல் மிகுந்த முதல்வர் என ராகுல் என்னை குறிப்பிடுகிறார். ஊழலில் ஊறி திளைத்தவர்கள் ராகுல் குடும்பத்தினர். போபர்ஸ் ஊழல், நேஷனல் ஹெரால்டு, 2ஜி, நிலக்கரி என அவர்களது ஊழல்களின் பட்டியல் நீளும். ஹிமந்த பிஸ்வ சர்மாஅசாம் முதல்வர், பா.ஜ.ஜனநாயகத்தை அழிக்கும்!ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம், பார்லிமென்ட் ஜனநாயகம் என்ற கருத்தை அழிக்கும். அத்துடன் கூட்டாட்சி தத்துவத்தையும், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பையும் பாதிக்கும். எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் வெளிப்படையாக மற்ற கட்சிகளுக்கு தாவி விலை போவர். அரவிந்த் கெஜ்ரிவால்டில்லி முதல்வர், ஆம் ஆத்மிவெற்றியை தாருங்கள்!வரும் லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும். இந்த சூழலில் தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது. அனைவரும் ஒற்றுமை உடன் செயல்படுங்கள்.மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை