உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தே.ஜ. கூட்டணிக்கு எதிரான போரில் வெற்றி : ஹேமந்த் சோரன்

தே.ஜ. கூட்டணிக்கு எதிரான போரில் வெற்றி : ஹேமந்த் சோரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: தே.ஜ. கூட்டணிக்கு எதிரான போரில் நாம் கடினமான வெற்றியை பெற்றுள்ளோம் என ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் முதல்வருமான ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.81 தொகுதிகளை கொண்ட இம்மாநில சட்டசபைக்கு நவ. 13 மற்றும் நவ. 20 என இரு கட்டங்களாக நடந்த தேர்தலில் இன்று (நவ.,23 ம் தேதி) ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் ஜே.எம்.எம்., காங்., கூட்டணி 56 இடங்களை பெற்றுள்ளது. ஜே.எம்.எம்., கட்சி தலைமையில் மூன்றாவது முறையாக முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்.இந்த வெற்றி குறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றமைக்கு வாழ்த்திய பிரதமர் மோடிக்கு எனது நன்றி.இத்தேர்தலில் தே.ஜ. கூட்டணிக்கும், இண்டியா கூட்டணிக்கும் இடையே நடந்த போரில் நாம் கடினமான வெற்றி பெற்றுள்ளோம். இது அனைவருக்கும் நன்றாக தெரியும்.மாநிலம் மீண்டும் வலுவானதாக இருக்க வேண்டும் என இத்தேர்தலில் புதிய இளம் வாக்காளர்கள் பங்கேற்று மிகப்பெரிய பொறுப்பான முடிவை எடுத்துள்ளனர். ஜனநாயக தேர்வில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். இந்த ஆட்சி மீது நம்பிக்கை வைத்து எங்களை வெற்றி பெற செய்த இளம் வாக்காளர்கள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்கள், என அனைத்து சமூகத்தினருக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.மீண்டும் நல்லாட்சி அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

சோரனுக்கு ஸ்டாலின் வாழ்த்து

தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ, ஏற்படுத்திய எண்ணற்ற தடைகளை கடந்து தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளீர், மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அதில் வாழ்த்தியுள்ளார்.

புது எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு

இதற்கிடையே புதிதாக சட்டசபைக்கு தேர்வு பெற்ற கூட்டணி கட்சியை சேர்ந்த புது எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஹே மந்த் சோரன் அழைப்பு விடுத்துள்ளார். அவர்களுடன் தலைநகர் ராஞ்சியில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ