உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயனுள்ள ஒப்பந்தம் தேவை!

பயனுள்ள ஒப்பந்தம் தேவை!

இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதற்கு பதிலாக அந்நாட்டிற்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை நாடு கடத்த ஒப்பந்தம் மேற்கொள்வதே நமக்கு பயனுள்ளது. அவர்களை, நம் நாட்டிற்கு அழைத்து வர பலர் காத்திருக்கின்றனர். ஜெய்ராம் ரமேஷ் பொதுச்செயலர், காங்கிரஸ்அறிவிக்க தயாரா? பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை இழந்துவிட்டார். வரும் சட்ட சபை தேர்தலை ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் சந்திக்கப்போவதாக கூறும் அவர், இதுவரை முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. நிதிஷ் மீது நம்பிக்கை இருந்தால், அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க அமித் ஷா தயாரா? தேஜஸ்வி யாதவ் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்

ஆதாரமற்ற குற்றச்சாட்டு!

பா.ஜ., ஆளும் மாநிலங்களில் பெங்காலி மக்கள் தாக்கப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டுவது அடிப்படை ஆதாரமற்றது. மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் ஊடுருவல்காரர்களை நீக்கினால், 70 தொகுதிகளில் கூட திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெறாது. இது, அவர்களை அச்சமடைய செய்துள்ளது. மிதுன் சக்கரவர்த்தி ராஜ்யசபா முன்னாள் எம்.பி., - பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை