உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரில் காற்று மாசுபாட்டை குறைக்க தேவை ரூ.3,230 கோடி! அறிவியல், தொழில்நுட்ப ஆய்வு மையம் மதிப்பீடு

பெங்களூரில் காற்று மாசுபாட்டை குறைக்க தேவை ரூ.3,230 கோடி! அறிவியல், தொழில்நுட்ப ஆய்வு மையம் மதிப்பீடு

பெங்களூரு : 'பெங்களூரில் காற்று மாசுபாட்டை குறைக்க, 3,230 கோடி ரூபாய் தேவைப்படும்' என்று அறிவியல், தொழில்நுட்ப ஆய்வு மையம் மதிப்பீடு செய்துள்ளது.உலகளவில் காற்று மாசு அதிகம் உள்ள முதல் 10 நாடுகளில், இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் அதிக காற்று மாசுபாடு உள்ள நகரமாக புதுடில்லி முதலிடத்தில் உள்ளது. இதுபோன்று, நாட்டின் பல நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.சமீபத்தில் பெங்களூரின் சி.எஸ்.டி.இ.பி., எனும் அறிவியல், தொழில்நுட்ப ஆய்வு மையம் ஆய்வு நடத்தியது. அதன் அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது:வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, அதில் இருந்து வரும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள், சாலையில் இருந்து எழும்பும் துாசுகளால் காற்று மாசு அதிகரித்து வருகிறது.* 2030ல் அதிகரிப்புகர்நாடகாவின் பல நகரங்களில் 2030க்குள் தீங்கு விளைவிக்கும் காற்று மாசு அளவு அதிகரிக்கும். குறிப்பாக, பெங்களூரு, தாவணகெரே, கலபுரகி, ஹூப்பள்ளி - தார்வாட் ஆகிய நகரங்களில் காற்று மாசு அளவு, 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2030ல் 31 முதல் 38 சதவீதம் வரை அதிகரிக்கும். இதனால் புற்றுநோய் உட்பட பல உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.காற்று மாசுபாட்டை குறைக்க, பெங்களூருக்கு 3,230 கோடி ரூபாயும்; தாவணகெரேவுக்கு 738.5 கோடி ரூபாயும்; கலபுரகிக்கு 582.2 கோடி ரூபாயும்; ஹூப்பள்ளி - தார்வாடுக்கு 968.2 கோடி ரூபாயும் தேவைப்படும். இதன் மூலம், 33 சதவீத காற்று மாசை குறைக்கலாம்.பெங்களூருக்கு அடுத்தபடியாக உள்ள தாவணகெரே, கலபுரகி, ஹூப்பள்ளி - தார்வாட் நகரங்களில் வணிகம், தொழில் துறை, கட்டுமானம், கட்டடங்கள் இடிப்பு, திறந்த வெளியில் பொருட்களை எரிப்பது மற்றும் போக்குவரத்து பெருக்கத்தால் காற்று மாசு அதிகரித்துள்ளது.* வழிகள் என்ன?ஹூப்பள்ளி - தார்வாட் நகரங்களில், 76 சதவீதம் கனரக வர்த்தக வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால் மாசு ஏற்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களில், டீசல் துகள் வடிகட்டிகளை மாற்றி அமைக்க வேண்டும்.தாவணகெரேயில், எல்.பி.ஜி., எனும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு சிலிண்டர்கள் எளிதில் கிடைக்கும் வகையில் உற்பத்தியை 93 சதவீதம் அதிகரிக்க வேண்டும். இதனால், நகரில 37 சதவீதம் காற்று மாசு குறையும்.அத்துடன் தாவணகெரேயில் 950 பொரி உற்பத்தி செய்யும் மில்கள் உள்ளன. இவற்றில், சுத்தமான எரிபொருள் பயன்படுத்தவும், பில்டர்களை பொருத்தவும், கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட வேண்டும். இதன்மூலம், இங்கு 40 சதவீதம் காற்று மாசு குறையும்.போக்குவரத்து துறையை மேம்படுத்த, பழைய வாகனங்களை நீக்க வேண்டும். காற்று மாசு ஏற்படுத்தாத பொது பஸ்கள், மாசு கட்டுப்பாட்டு மையங்கள், மின்சாரம் அல்லது சி.என்.ஜி.,யில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்தலாம்.எல்.பி.ஜி., பயன்பாட்டை அதிகரிப்பது, உள்நாட்டு துறையில் திட எரிபொருட்களை ஊக்கப்படுத்துவது, தொழிற்சாலைகளுக்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய விதிமுறைகளையும்; திடக்கழிவு மேலாண்மை விதிகளையும் தீவிரமாக அமல்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் மூலம் காற்று மாசை குறைக்க முடியும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.... புல் அவுட் ...பழைய வர்த்தக வாகனங்களில், டீசல் துகள் வடிகட்டியை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்.பி.ஜி., சிலிண்டர்களை பயன்படுத்துவதால், இந்நகரங்களில் காற்றின் தரம் உயரும்.அனிர்பன் பானர்ஜி,ஆராய்ச்சியாளர், சி.எஸ்.டி.இ.பி.,***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை