உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிரம்புக்கு எதிராக மோடி அரசை ஆதரிக்க வேண்டும்: சரத்பவார்

டிரம்புக்கு எதிராக மோடி அரசை ஆதரிக்க வேண்டும்: சரத்பவார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாக்பூர்: '' நாட்டு நலனை கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கு எதிராக, நெருக்கடி உத்தியை கையில் எடுத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக மத்திய அரசுக்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்'', என முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார்.நாக்பூரில் நிருபர்களை சந்தித்த சரத்பவார் கூறியதாவது : இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பது என்பது டிரம்ப்பின் நெருக்கடி உத்தி. நாட்டு நலனை பாதுகாக்க குடிமக்களாகிய நாம், மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். தற்போதைய நிலையில் மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்து விட்டதா என்பதை யூகிக்க விரும்பவில்லை.டிரம்ப் முன்பு அதிபராக இருந்த போது அவரின் பணிதிறனை நாம் பார்த்துள்ளோம். அவரை யாரும் கட்டுப்படுத்த முடியாது என நான் நினைக்கிறேன். அவர் மனதில் பட்டதை எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார். இதற்கு நாம் கவனம் கொடுக்கத் தேவையில்லை.நமது அண்டை நாடுகளை அணுகும் முறையை நாம் புறக்கணிக்கக்கூடாது. இன்று பாகிஸ்தான் நமக்கு எதிராக உள்ளது. நேபாளம், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகள் நம்மால் மகிழ்ச்சியாக இல்லை. அவை நம்மை விட்டு விலகிச் செல்கின்றன. இதனை மோடி புறக்கணிக்காமல், உறவை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சந்தேகம் இல்லை

தொடர்ந்து ராகுலின் குற்றச்சாட்டு தொடர்பாக சரத்பவார் கூறியதாவது: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு முன்பு, இரண்டு பேர் டில்லியில் என்னை சந்தித்தனர். மஹாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளில் 160 தொகுதிகளில் வெற்றி உறுதி என என்னிடம் தெரிவித்தனர். இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. தேர்தல் கமிஷன் மீது எனக்கு சந்தேகம் இல்லை. இதனால், அவர்களை ராகுலை சந்திக்க வைத்தேன். அவர்கள் என்னிடம் கூறியதை ராகுலிடம் தெரிவித்தனர். ஆனால், இதற்கு நாம் கவனம் செலுத்தக்கூடாது. அது நமது பாதையும் இல்லை என நானும், ராகுலும் முடிவு செய்தோம். ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டியது உள்துறை அமைச்சரின் கடமை. ஆனால், அவர் வேறு விஷயத்தை நோக்கி கவனத்தை திசைதிருப்புகிறார். பீஹார் வாக்காளர் பட்டியல் குறித்து நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். கடந்த 15 நாட்களாக இந்த விவகாரத்தினால் பார்லிமென்டில் அமளி நடக்கிறது. பார்லிமென்ட் மூலம் உண்மையாவ விஷயம் மக்கள் முன்பு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kumar Kumzi
ஆக 09, 2025 22:33

உடம்பில் இத்தாலிய ரத்தத்தோடு உலாவும் தேசத்துரோகி பப்பூ இதை உணர்வாரா


Dv Nanru
ஆக 09, 2025 20:05

நாட்டு நலனை கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கு எதிராக, நெருக்கடி உத்தியை கையில் எடுத்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக மத்திய அரசுக்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும், என முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார். அவரின் கருத்து வரவேற்க தக்கது ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையும் அமெரிக்க பொருளை பயன்படுத்தாமல் இந்திய பொருட்களை மட்டும் பயன்படுத்தினால் ட்ரம்ப் தானாகவே அடங்கிவிடுவார் அதில் எந்த சந்தேகமும் இல்லை..


SUBBU,MADURAI
ஆக 09, 2025 19:59

Absolutely When a respected leader like Sharad Pawar calls for unity, its high time Rahul Gandhi stops playing politics and stands firmly with Indias interests. National challenges require national solidarity, not division.


பேசும் தமிழன்
ஆக 09, 2025 19:36

நம்ம விடியல் தலைவர் கருத்தை கேட்டு பதிவு செய்யுங்கள்....


மணியன்
ஆக 09, 2025 18:57

என்ன இருந்தாலும் சரத்பவார் உடம்பில் ஓடுவது 100% இந்திய ரத்தம்,இத்தாலிய ரத்தம் ட்ரம்பை தான் ஆதரிக்கும்.


Subburamu Krishnasamy
ஆக 09, 2025 18:43

Welcome Power ji Congrats foe your patriotic statements


பழனி ராஜா
ஆக 09, 2025 18:35

ஐயா, ட்ராக் மாறி ஓடுதே.... மோடிக்கு ஆதரவாக தெரிவிக்காமல் விட்டால் நம் பிரிவினை சாயம் வெளுத்து விடும் போல் உள்ளதே. ..... நம் பழைய ஆயுத்தை எடுத்து விட வேண்டும்...... ஓகே.... இந்தி ஒழிக.... இந்தி ஒழிக....


Ramesh Sargam
ஆக 09, 2025 18:14

உங்களுக்கு புரியுது. சசி தரூருக்கு புரியுது, ஆனால் அந்த ராகுலுக்கு புரியவில்லையே தமிழக முதல்வர் மத்திய அரசின் செயல்கள், திட்டங்கள் எல்லாவற்றுக்கும் எதிர்மறையான விமர்சனம் செய்வார். ஆனால் இந்த வசூல் ராஜா ட்ரம்பின் அதிக வரி அறிவிப்புக்கு இதுவரையில் ஒன்றும் கூறவில்லை.


பேசும் தமிழன்
ஆக 09, 2025 17:51

மக்கள் அனைவரும் கண்டிப்பாக ஆதரவளிப்பார்கள்.... ஆனால் உங்கள் புள்ளி வைத்த இந்தி கூட்டணி ஆட்கள் ஆதரவு தெரிவிப்பார்களா ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை