உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "நீட் விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

"நீட் விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'நீட் தேர்வு விவகாரத்தில் யாராவது தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்த நிலையில், 'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நாடு ஒரே கோரிக்கை' என உ.பி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார். இந்நிலையில் ஆங்கில சேனலுக்கு, தர்மேந்திர பிரதான் அளித்த பேட்டி: நீட் தேர்வு விவகாரத்தில் யாராவது தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் யாரும் தப்பிக்க மாட்டார்கள். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=op2drfef&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மறு தேர்வு

குறைவான தேர்வு நேரம் ஒதுக்கப்பட்டதால், சில மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதில் மத்திய அரசிற்கு உடன்பாடு இல்லை. உச்சநீதிமன்ற உத்தரவு படி கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 மாணவ, மாணவிகளுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

நடவடிக்கை

இரு இடங்களில் தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை மத்திய அரசு மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் உள்பட யாரும் தவறு செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தாமரை மலர்கிறது
ஜூன் 17, 2024 19:02

நிட்டை வைத்து அரசியல் செய்ய எதிர்க்கட்சிகள் துடிக்கின்றன. அதற்கு அவல் கொடுப்பதை போன்று மத்திய அரசு எதுவும் வெளிப்படையாக சொல்ல தேவை இல்லை. வேண்டுமென்றால், அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று கதறட்டும். நீதிமன்றம் கேட்டால் மட்டுமே, மத்திய அரசு பதில் சொல்லவேண்டும். எதிர்க்கட்சிகளின் பொய்குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் சொல்லத்தேவை இல்லை. ரெண்டுநாளில் கதறிவிட்டு, அவர்களே அமைதியாகிவிடுவார்கள். பிறகு ரெண்டுநாளில் அடுத்த பொய் பிரச்னையை பற்றி பேசத்தொடங்கி விடுவார்கள். பொய் குற்றச்சாட்டுக்கு பதில் சொன்னால், எதிர்பேச்சு பேசிக்கொண்டிருப்பார்கள்.


அரசு
ஜூன் 17, 2024 18:57

குற்றவாளிகளை பாதுகாப்பதே நீங்கள் தானே.


Raa
ஜூன் 17, 2024 18:49

குற்றவாளிகள் உருவாகும் வரை என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? எப்போதுமே போஸ்ட்மார்ட்டம் தானா? மரணம் நிகழாமல் தடுக்கவே மாடீர்களா?


அப்புசாமி
ஜூன் 17, 2024 17:15

கிழிச்சீங்க.... அங்கே வேலை செய்யுறவங்க எல்லாமே உங்க ஆளுங்கதானே... உங்க சீட்டைக் கிழிச்சுறப் போறாங்க


chennai sivakumar
ஜூன் 17, 2024 18:21

அதுதான் நடக்கும். குற்றவாளிகளை இவர்களால் தூக்கில் போட முடியுமா?


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி