உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்வுக்கு முதல்நாளே வினாத்தாள் கிடைத்தது: கைதான மாணவர்கள் போலீசில் வாக்குமூலம்

தேர்வுக்கு முதல்நாளே வினாத்தாள் கிடைத்தது: கைதான மாணவர்கள் போலீசில் வாக்குமூலம்

பாட்னா: சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வு தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் தங்களுக்கு கிடைத்தது என பீஹாரில் கைது செய்யப்பட்ட 4 மாணவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.24 லட்சம் மாணவர்கள், மே 5ம் தேதி எழுதிய நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்தது. மேலும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதில் குளறுபடி எழுந்தது. நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த தேர்வில் நடந்த குளறுபடி தொடர்பாக பீஹாரில் 3 மாணவர்கள் மற்றும் மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட மாணவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: நீட் தேர்வுக்கு முந்தைய நாளே வினாத்தாள் கிடைத்தது. அதனை நன்கு படித்து தேர்வுக்கு தயாரானோம். இதில் இருந்த கேள்விகளே, மறுநாள் தேர்வு எழுத சென்ற போது கேட்கப்பட்டு இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

என்றும் இந்தியன்
ஜூன் 20, 2024 17:02

அப்படி செய்தது யார் - தேஜஸ்வி யாதவ் முன்னாள் துணை முதல்வர் ன் P.A.


Sivak
ஜூன் 20, 2024 14:54

இதெல்லாம் ஒரு செட்டப் என தெரிய வந்துள்ளது ... அவர்கள் மாணவர்கள் பெயரில் அரசியல் கட்சிகளுக்கு கூலி வேலை செய்யும் குண்டர்கள் ....


M.COM.N.K.K.
ஜூன் 20, 2024 14:34

இந்தியாவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகள் அனைத்தும் இப்படித்தான் நடக்கிறதுபோல் தெரிகிறதே.


chennai sivakumar
ஜூன் 21, 2024 03:38

சொந்த அனுபவம். ITDC என்று அழைக்கபடும் மத்திய அரசு control இல் இருந்த/ இருக்கும் நிறுவனத்தில் நேர்முக தேர்வு. எல்லோரும் காத்து இருக்கிறோம். திடீரென்று ஒரு பெரிய அதிகாரி வந்து என்ன இவ்வளவு கூட்டம் என்று கேட்டார். உடனே நேர்முக தேர்வுக்கு வந்து இருக்கிறார்கள் என்று கீழ் நிலை அதிகாரி பதில் அளித்தார். உடனே மேல் அதிகாரி "எப்படி எனக்கு சொல்லாமல் தேர்வு நடத்துவீர்கள்? உடனடியாக ரத்து செய்யுங்கள் என்றார் எங்கள் எதிரிலேயே. பஸ் போகாத இடம் தேர்வு நடந்த இடம். நான் ஒருவரிடம் bike kadan வாங்கி தேர்வுக்கு சென்றேன். நேர்முக தேர்வுக்கு வந்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? வேறு ஒரு central govt en துணைவியார் attend செய்தபோது Madam உங்களுக்கு எல்லா தகுதியும் இருக்கிறது. நீங்கள் written il pass nalla மதிப்பெண் பெற்று உள்ளீர்கள். ஆனாலும் உங்களுக்கு appointment தர முடியாது. என என்றால் இங்கு temporary aaga velai செய்பவர்களை நியமிக்க போகிறோம். இந்த தேர்வு ஒரு கண் துடைப்பு என்று நேரடியாக கூறினார்.இப்படித்தான் இவர்கள் செயல்பாடுகள் நடக்கின்றன. இது நடந்து almost 40/30 வருடங்கள் ஆகி விட்டது. ஆகையினால் கவுண்டமணி அவர்கள் சொல்லுவதுபோல இதெல்லாம் சகஜம் என்று எடுத்து கொள்ள வேண்டியது தான்


அசோகன்
ஜூன் 20, 2024 14:06

முன்பே ஒரு மாணவியை விட்டு பொய் ஆதரங்களை காட்டி.... பின் நீதிமன்றதில் மாட்டி இப்போ மன்னிப்பு கேட்டு கொண்டிருக்கிறாள்.. இந்த நீட்டை கொண்டுவந்ததே திமுகவும் காங்கிரஸ்ம்தான் ஆனா எப்படி நடித்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.. நீட்டை நிறுத்த ஒரே வழி உச்ச நீதிமன்றம் அங்கே யாரும் தலை வைத்து கூட படுப்பதில்லை ????


venugopal s
ஜூன் 20, 2024 12:47

பாஜக ஆதரவாளர்கள் எல்லோரும் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவு விஷயத்தில் பிஸியாக இருப்பதால் இந்தப் பக்கம் யாரும் வரமாட்டார்கள் என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்!


rsudarsan lic
ஜூன் 20, 2024 12:33

Cancel NEET, IAS IPS TNPSC all exams and probe.


தத்வமசி
ஜூன் 20, 2024 12:30

இது வேலியே பயிரை மேயும் கதை. முந்தைய தினம் கிடைத்ததற்கான சான்று? சொல்வது மட்டுமே சான்றாகுமா? காரணம் தோற்றுப்போன விரக்தியில் இண்டி கூட்டணி எதையும் செய்ய காத்திருக்கிறது. இது உண்மையாக இருந்தால் என்டிஏ அமைப்பில் உள்ளவரும் உடந்தையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அதனால் இதில் தொடர்புள்ள அனைவரையும், இந்த மாணவர்களையும் சேர்த்து கைது செய்ய வேண்டும். இதை வேறு விதமாகவும் விசாரணை வேண்டும். இந்த நீட் தேர்வினை குலைப்பதற்காக ஒரு கூட்டம் இப்படி செய்கிறதா? அதற்காக இவர்கள் இப்படி கூறுகிறார்களா என்றும் விசாரணை செய்ய வேண்டும். ஆருஷி படேல் என்பவர் இப்படித்தான் கூறி நீதிமன்றத்தில் வகையாக மாட்டிக் கொண்டார். அதனால் சரியான, தீவிரமான விசாரணை செய்ய வேண்டும்.


mothibapu
ஜூன் 20, 2024 11:36

பரீட்சை எழத வரும் மாணவர்களிடம் தேவையற்ற தடைகள் செய்து அனுமதிப்பது குறிப்பாக மாணவிகளிடம். ஆனால் மேல உள்ளவர்கள் பணம் வாங்கிவிட்டு தேர்வுத்தாள் லீக் seigiraagal.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ