மேலும் செய்திகள்
இன்று இனிதாக...(21.11.2025) புதுடில்லி
1 minutes ago
ரூ.4.47 லட்சத்தை கொள்ளையடிக்க முயற்சித்த இருவர் கைது
2 minutes ago
மின்சாரம் பாய்ந்ததில் சமையலர் பலி
2 minutes ago
புதுடில்லி:காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான, 'ஜவஹர்லால் நேரு மெமோரியல் பண்ட்' என்ற நிறுவனத்தின் ஏற்பாட்டில், 'செலக்டட் வொர்க்ஸ் ஆப் ஜவஹர்லால் நேரு' என்ற முன்னாள் பிரதமர் நேருவின் படைப்புகள், ஆன்லைனில் நேற்று முதல் கிடைக்கின்றன. இதில், 35 ஆயிரம் டாக்குமென்டுகள், 3,000 படங்கள் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பாக, காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறியதாவது: மகாத்மா காந்திக்கும், நேருக்கும் இடையேயான கடித போக்குவரத்து, சர்தார் வல்லபபாய் படேல் - நேரு, சுபாஷ் சந்திர போஸ் - நேரு போன்றவை உள்பட அனைத்து கடிதங்களும், டாக்குமென்டுகளாக ஆன்லைனில் இன்று முதல் கிடைக்கின்றன. இதற்கான பணியை சிறப்பாக மேற்கொண்டது, ஜவஹர்லால் நேரு மெமோரியல் பண்ட். இதற்காக, வாசகர்கள் nehruarchive.inஎன்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். மொத்தம், 75 ஆயிரம் பக்கங்களில், 35 ஆயிரம் டாக்குமென்டுகள், 3,000 முக்கிய படங்கள் ஆன்லைனில் கிடைக்க உள்ளது. இது, 1903 - 1964 வரையிலான நேருவின் கால கட்டத்தில் நடந்த முக்கிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 2024 நவ., 14ல், 'செலக்டட் வொர்க்ஸ் ஆப் நேரு என்ற படைப்புகள், ஆன்லைனில் அடுத்த ஆண்டிற்குள் கிடைக்கும்' என கூறியதன் படி, இப்போது அந்த படைப்புகள் ஆன்லைனில் வந்துள்ளன. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
1 minutes ago
2 minutes ago
2 minutes ago