உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டி.எஸ்.பி., சுந்தரேசன் வழக்கில் புதிய திருப்பம்; தலைமை காவலர் சஸ்பெண்ட்

டி.எஸ்.பி., சுந்தரேசன் வழக்கில் புதிய திருப்பம்; தலைமை காவலர் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மயிலாடுதுறை: டி.எஸ்.பி., சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்ட கடிதத்தை, உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் பொதுவெளியில் வெளியிட்டதாக கூறி, தலைமை காவலர் சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேலன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை டி.எஸ்.பி., சுந்தரேசன் முன் வைத்தார். மயிலாடுதுறை எஸ்.பி., ஸ்டாலின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் சுந்தரேசன் சுமத்தினார். இதற்கு எஸ்.பி., ஸ்டாலின் மறுப்பு தெரிவித்தார்.இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய மண்டல ஐ.ஜி., ஜோஷி நிர்மல் குமார், தஞ்சாவூர் டி.ஐ.ஜி., ஜியாவுல் ஹக் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். சீருடை பணியாளர் விதிகளை மீறி, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக, சுந்தரேசனை 'சஸ்பெண்ட்' செய்யவும் முடிவு செய்துள்ளனர்.இதற்கிடையே, காவல் துறையில் அதிகாரிகள் செய்யும் 'டார்ச்சர்' குறித்து, செய்தியாளர்களுக்கு சுந்தரேசன் பேட்டி அளித்ததால், அவருக்கு காவலர்களிடம் ஆதரவு பெருகி வருகிறது. இந்த சூழலில், டி.எஸ்.பி., சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்ட கடிதத்தை, உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் பொதுவெளியில் வெளியிட்டதாக கூறி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமை காவலராக பணியாற்றும் சரவணன் நேற்றிரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Natchimuthu Chithiraisamy
ஜூலை 26, 2025 13:56

முதலமைச்சர் வெளிநாட்டு கும்பலை நம்புகிறார் எத்தனை நம்மவர்கள் நாட்டில் உள்ளனர்


Padmasridharan
ஜூலை 20, 2025 06:52

சட்டத்தை மொதல்ல ஒழுங்கா நடத்த வேண்டியவங்களே இப்படி பல குற்றங்கள செஞ்சிகிட்டு இருக்காங்களே இவங்க qualification & training அ மாத்தி அமைக்கலாமே சாமி. சீருடை பணியாளர்கள்தான் விதிகளை மீறி, மக்களை அதட்டி மிரட்டி பணம் /பொருள் புடுங்கிட்டு ஒழுங்கீனமாக நடந்துகிட்டு இருக்காங்க. Dismiss பண்ணாம suspension / transfer கொடுத்தால் சில நாட்களுக்கு பின்னர் அதே இடத்தில் புது தவறுகளையும் அல்லது போன புது இடத்தில் அதே தவறுகளையும் செய்வார்கள்லே சாமி


Ramesh Sargam
ஜூலை 19, 2025 16:40

திமுக அரசு திக் பயத்தில் உள்ளது.


என்றும் இந்தியன்
ஜூலை 19, 2025 15:57

சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேலன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை டி.எஸ்.பி., சுந்தரேசன் முன் வைத்தார். மயிலாடுதுறை எஸ்.பி., ஸ்டாலின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் சுந்தரேசன் சுமத்தினார். டி எஸ் பி சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்தது சரியே???ஏன்???நடப்பது முஸ்லீம் கிறித்துவ ஆட்சி?? டேவிட்சன் மீது குற்றச்சாட்டு??? ஸ்டாலின் அதுவும் முதல்வர் பேர் கொண்ட எஸ் பி மீது குற்றச்சாட்டு???ஆகவே இது தான் உண்மையான காரணம் நடவடிக்கைக்கு. சுந்தரேசன் இப்படி நேரடியாக திராவிட அரசை குறை கூறுவது போல இருந்ததால் இந்த பணியிடை நீக்கம்.


ManiK
ஜூலை 19, 2025 14:32

இந்த திமுக ஆட்சியில க்ரிப்டோ கன்வர்ஷன் கூட்டத்த உயரதிகாரிகளாக நியமித்து அநியாயம் அரங்கேறி தாண்டவமாடுது.


V Venkatachalam
ஜூலை 19, 2025 14:15

இவரை சஸ்பெண்டு செய்தது சரியில்லை என்பதையும் சரவணனை சஸ்பெண்டு செய்தது சரியா என்பதையும் கோர்ட் மட்டுமே முடிவு செய்யமுடியும். அதற்கு இவர்கள் இருவருமே கோர்ட் படியேறணும்.‌ தீய முக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்ளும் லெவலுக்கு தள்ளப்படுகிறார்கள். அதிகாரிகள் நிலமை பொது மக்கள் நிலமையை விட மோசமாகி விட்டது. எப்படி இவர்களால் நேர்மையாக செயல் பட முடியும். பொது மக்கள் பிரச்சினையை தீர்க்க ஒரே வழி தீயமுகவின் கட்டப்பஞ்சாயத்துதான்.


தமிழ்வேள்
ஜூலை 19, 2025 13:57

சர்வதேச போதை கடத்தல் காரனுக்கு சல்யூட் அடித்து கார் கதவை திறந்து விட சீருடைப்பணியாளர் நடத்தை விதிகள் அனுமதி தருகின்றனவா?


கோமாளி
ஜூலை 19, 2025 13:37

புகாரை விசாரிக்காமல் சம்பந்தம் இல்லாதவர்களை சஸ்பென்ட் செய்கிறார்கள்.


chinnamanibalan
ஜூலை 19, 2025 13:35

அன்று ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார். நேர்மையான அதிகாரிகள் மன உளைச்சலுக்கு ஆளாகும் போது, அரசின் தவறுகள் வெளியில் வருவது இயற்கை. எவ்வளவு காலம்தான் தவறுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது?


MARAN
ஜூலை 19, 2025 12:23

சுந்தரசேன் அவர்களை பார்க்கும் போது , நல்ல அதிகாரியாகத்தான் தெரிகிறது , தவறு செய்தவர் இவ்வளவு தைரியமாக பேசமாட்டார் ,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை