உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நியூஸ் சேனல் குழு பயணித்த கார் மோதி 2 மாணவர்கள் பலி

நியூஸ் சேனல் குழு பயணித்த கார் மோதி 2 மாணவர்கள் பலி

பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி அஞ்சுமூர்த்திமங்கலத்தை சேர்ந்த அஷ்ரப்அலி மகன் முகமது ரோஷன், 15. நாயர்குன்னு கைதப்பாடம் பகுதியைச் சேர்ந்த இக்பால் மகன் முகமது இசாம், 15. இருவரும் பந்தலாம்பாடம் அருகே உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்தனர்.வாணியம்பாறை மேலேசுங்கம் பகுதியில், பாலக்காடு -- -கொச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நேற்று மதியம் 1:30 மணிக்கு பள்ளிக்கு சென்றனர். அப்போது, நீலிப்பாறை என்ற இடத்தில் அதிவேகமாக வந்த, தனியார் நியூஸ் சேனல் குழு பயணித்த கார் அவர்கள் மீது மோதியது.விபத்தில், மாணவர்கள் இருவரும் இறந்தனர். வடக்கஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருச்சூர் தலோர் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் இமானுவேல், 25, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை