உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛நியூஸ் க்ளிக் ஆசிரியரை கைது செய்தது செல்லாது: விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

‛நியூஸ் க்ளிக் ஆசிரியரை கைது செய்தது செல்லாது: விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ‛‛நியூஸ் க்ளிக்'' நிறுவனர் மற்றும் ஆசிரியரை கைது செய்யப்பட்டது செல்லாது எனக்கூறியுள்ள உச்சநீதிமன்றம்,அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டு உள்ளது.சீனாவிடம் இருந்து நிதி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து நியூஸ்க்ளிக்செய்தி இணையதளதின் நிறுவனர் பரபீர் புரக்யஸ்தா மற்றும் மனித வளத்துறை தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோரை 2023 அக்.,3 ல் டில்லி போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்(UAPA) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=txfoir7d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று( மே 15) அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது: பரபீர் புரக்யஸ்தாவை கைது செய்ததும், சிறையில் அடைத்தது செல்லாது. கைது செய்ததற்கான காரணத்தை, அவரை கைது செய்வதற்கு முன்னர், அவரிடமோ அல்லது அவரது வழக்கறிஞரிடமோ கூறப்படவில்லை எனக்கூறிய நீதிமன்றம், அவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

S Regurathi Pandian
மே 16, 2024 12:25

கைது செய்தது செல்லாது, தவறு என்றால் அந்த தவறை செய்த அமலாக்கத்துறை மீது என்ன நடவடிக்கை? கிட்டத்தட்ட ஒரு நபரை சட்டவிரோதமாக கைது செய்து மாதம் சிறையில் வைத்திருந்தது மனித உரிமை மீறல் இல்லையா?


Kundalakesi
மே 17, 2024 17:01

துறை ரீதியிலான நடவடிக்கை மட்டுமே எடுக்க முடியும் சட்டத்தை எமோஷன் ஆக பார்க்க முடியாது


தத்வமசி
மே 16, 2024 08:48

இந்த கருத்து உண்மை என்றால் சவுக்கு சங்கர் விவகாரத்தில் கோர்ட் என்ன செய்து கொண்டிருக்கிறது ?


Rajendra Kumar
மே 16, 2024 04:22

நீதித்துறை வரம்பில்லா அதிகாரத்துடன் இருக்கிறது அவர்களுக்கு செக் வைக்காவிட்டால் நாட்டை ஆள நினைப்பர் நீதித்துறை சீரமைக்கப் பட வேண்டும் நம் நாட்டு நீதித்துறை பல நேரங்களில் குற்றவாளிகளுக்கு சாதகமாகவே செயல் படுகிறதோ என தோன்றுகிறது


Saai Sundharamurthy AVK
மே 15, 2024 22:56

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனுசிங்வியும் உச்சநீதிமன்ற நீதிபதிகளும் உற்ற நண்பர்கள் என்பது புரிகிறது. இந்த உறவை வைத்தது தான் ED வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கி காப்பாற்றுகிறார். பொன்முடிக்கு அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் வாங்கி கொடுத்திருக்கிறார். இப்போது கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்திருக்கிறார். இன்னும் பல தில்லுமுல்லு வேலைகளை யெல்லாம் இந்த காங்கிரஸ்காரர் உச்சநீதிமன்ற நீதிபதிகளை கையில் போட்டுக் கொண்டு தன் கட்சி மற்றும் தங்களின் கூட்டணி கட்சிகளுக்கும் சேவகம் புரிந்து வருகிறார். நீதிபதிகளும் அதிலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இவருக்கு அடிபணிந்து போவது வெட்கக்கேடான செயல்...நாட்டுக்கு செய்யும் துரோகம் ஆகும்.


தாமரை மலர்கிறது
மே 15, 2024 18:56

தேர்தல் முடிந்தவுடன் நீதித்துறை சீரமைக்கப்படும்


jayvee
மே 15, 2024 17:57

இப்போது நியூஸ் கிளிக் ஆசிரியர் இதற்க்கு எதற்கு NIA ED சிபிஐ எல்லாம் ? மத்திய அரசு வழக்கறிஞர்கள் வேறு


J.V. Iyer
மே 15, 2024 17:57

இப்படி நீதிமன்றங்களே குற்றம்செய்பவர்களை காத்தால் மக்களுக்கு எப்படி இவர்கள்மீது நம்பிக்கை வரும்?


sethu
மே 15, 2024 17:56

இதுவரை சீனர்கள் பல நாட்டு அரசின் கணிப்பொறியை கைஜாக் பண்ணினார்கள் இப்போது உலக அளவில் எப்படி ?


sethu
மே 15, 2024 17:49

தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் ஆனால் தீர்ப்பு வழங்கியவரை ?


Ganesh Shetty
மே 15, 2024 20:54

பார்லிமெண்ட் கூட்டு குழு தீர்ப்பு கொடுத்தவரை விசாரித்து வீட்டிற்கு அனுப்பலாம் என்கிற அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உண்டு


Bala Paddy
மே 15, 2024 15:53

உச்ச நீதி மன்றம் எங்கே செல்கிறது? நீதி துறை ரிபோர்ம் அவசியம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை