உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாலையோர கடையில் சிற்றுண்டியை ருசித்த நீடா அம்பானி

சாலையோர கடையில் சிற்றுண்டியை ருசித்த நீடா அம்பானி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாரணாசி: காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா, பிறகு அங்குள்ள சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் மகன் ஆனந்த் திருமணம் அடுத்த மாதம் 12ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ அரங்கில் நடைபெறுகிறது. ராதிகா மெர்ச்சண்டை அவர் மணம் முடிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மகன் திருமணத்தை முன்னிட்டு நீடா அம்பானி காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இது குறித்து பேசிய அவர், மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். ஹிந்து மரபுப்படி கடவுளின் ஆசிர்வாதத்தை நாடுகிறோம். திருமணத்திற்கு கடவுளை அழைத்திருப்பதாக தெரிவித்தார்.பிறகு அவர், அங்குள்ள சாலையில் இருந்த சிற்றுண்டி கடைக்கு சென்று மக்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். உருளைக்கிழங்கு மசாலாவில் செய்யப்பட்ட சிற்றுண்டியை ருசித்த அவர், அதன் சுவை மற்றும் தயாரிப்பு குறித்து கடை ஊழியர்களுடன் பேசினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அண்ணாமலை ஜெயராமன்
ஜூன் 26, 2024 16:49

அது சாலையோர கடை அல்ல, சிறிய உணவகம். இதெல்லாம் செய்தியாக போடவேண்டிய அவசியம் இல்லை.


Prasanna S
ஜூன் 26, 2024 15:21

வெட்டி சீனுக்கு ஒரு குறையுமில்லை. கரை வேட்டி தோத்துட்டுல்ல..... மாட மாளிகை ல விதவிதமா சாப்ட்டாலும் திருப்தியா ருசிக்க வீதிக்கு தான் வரனும்.


SUBRAMANIAN P
ஜூன் 26, 2024 13:29

அம்மா, அதெல்லாம் சரிதான்.. சாமி கும்பிட்டீங்க. சாப்டீங்க. நல்லது போகும்போது யாரும் ஒன்னும் கொண்டு போகப்போறதில்ல. உங்க பிள்ளைகளுக்கு தேவையானதை கொஞ்சமா கொடுத்துவிட்டு மற்ற அனைத்து சொத்துக்களையும் இல்லாதுபட்ட ஏழைகளுக்கு தானதர்மம் கொடுத்திடுங்க. வரலாறில் உங்க பெயர் நிலைத்து நிற்கும்.


ES
ஜூன் 26, 2024 12:30

What is the purpose of this news?


ganapathy
ஜூன் 26, 2024 12:05

வெரிகுட்


MADHAVAN
ஜூன் 26, 2024 11:26

அம்பானி இந்திய அரசாங்கத்துக்கு தரவேண்டிய கடன் வட்டி எல்லாம் கொடுத்தால், இப்படி சாலைஓர கடைல தான் வாங்கி திங்கவேண்டி இருக்கும்,


Balasubramanian
ஜூன் 26, 2024 10:35

பில் கேட்ஸே பெங்களூரில் சாலையோர கடையில் டீ குடித்தாராம்! இது பெரிய விஷயம் இல்லை! ஆனால் கடைக்காரருக்கு அதிர்ஷ்ட யோகம் அடித்தாலும் அடிக்கலாம்! அவர் கல்யாண விருந்தில் சாலை ஓரக் கடை என்ற பிரிவில் ஸ்டால் போட அழைக்க படலாம்!


Anand
ஜூன் 26, 2024 10:34

வாழ்த்துக்கள்.


Vijay S
ஜூன் 26, 2024 10:24

அதுக்கு என்ன இப்போ


மேலும் செய்திகள்