உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிமிஷாவின் துாக்கு ரத்து? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு!

நிமிஷாவின் துாக்கு ரத்து? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு!

புதுடில்லி, : ஏமனில், கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் துாக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவலை, நம் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா, 38, கடந்த 2008ல், மேற்காசிய நாடான ஏமனுக்கு வேலைக்காக சென்றார். அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து, 'கிளினிக்' துவங்கினார். தொழில் போட்டியால், 2017ல், அவரை நிமிஷா பிரியா கொலை செய்தார். இந்த வழக்கில், அவருக்கு 2020ல் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 16ம் தேதி நிமிஷா பிரியாவுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், மத்திய அரசு மற்றும் கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர் காந்தாபுரம் அபுபக்கர் முஸ்லியார் மத்தியஸ்தத்தில் ஈடு பட்டதை அடுத்து, தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டது. இதற்கிடையே, நிமிஷா பிரியாவின் துாக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதாகவும், எனினும், ஏமன் அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ கடிதம் வரவி ல்லை என்றும், அபுபக்கர் முஸ்லியாரின் அலுவலகம் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது. இந்நிலையில், இந்த தகவலை நம் வெளி யுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 'நிமிஷா பிரியாவின் துாக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை' என, அமைச்சகம் குறிப்பிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
ஜூலை 30, 2025 15:57

முஸ்லீம் நேரு காங்கிரசே தூங்குறியா நீ இந்த வழக்கை எடுத்துக்கொண்டு ஏமனுக்கு போய் நீதி கேளேன்???இங்கே operation sindhoor பற்றி உளறுவதற்கு பதில்


Indian
ஜூலை 30, 2025 09:12

தண்டனை உறுதி ..... பிறகு நிறுத்தி வைப்பு .... இப்படியே மாறி மாறி நடக்கிறது .... .செத்து செத்துப் பிழைப்பது இறப்பதை விடக் கொடுமை .........


முக்கிய வீடியோ