உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அச்சுறுத்தும் நிபா வைரஸ்: கேரளாவில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி

அச்சுறுத்தும் நிபா வைரஸ்: கேரளாவில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் தொற்று, மேலும் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 24 வயது வாலிபர் நிபா வைரஸ் பாதிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிதாபமாக இறந்தார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. தொடர்பில் இருந்த 267 பேரில், அறிகுறியின் அடிப்படையில் ஆறு பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.இதில் இரண்டு பேருக்கும் நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து 2 பேரும் மலப்புரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, நிபா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

P. VENKATESH RAJA
செப் 22, 2024 15:15

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவியது போல் நிபா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிபா வைரஸ் நாடு முழுவதும் பரவினால் கொரோனா போல ஊரடங்கு போட்டால் மக்கள் நிலைமை மோசமாகிவிடும்


முக்கிய வீடியோ