உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இங்கே, அங்கே போக மாட்டேன்: பிரதமர் முன்பு நிதீஷ் உறுதி

இங்கே, அங்கே போக மாட்டேன்: பிரதமர் முன்பு நிதீஷ் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் பேசிய பீஹார் முதல்வர் நிதீஷ்குமார், '' இனிமேல் இங்கேயும் அங்கேயும் அணி மாற மாட்டேன் '' என்றார். இதனை கேட்ட மோடி சிரித்தார்.பிரதமர் மோடி, பீஹார் சென்றுள்ளார். அவுரங்காபாத்தில் நடந்த விழாவில் நலத்திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர், பிறகு பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசினார்.இந்தக் கூட்டத்தில் பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் பேசும் போது, '' இதற்கு முன்பும் பிரதமர் இங்கு வந்தார். அப்போது நான் இங்கு இல்லை. ஆனால் தற்போது உங்களுடன் உள்ளேன். இனி இங்கேயும், அங்கேயும் போக மாட்டேன் என உறுதி அளிக்கிறேன். உங்களுடன் ( தே.ஜ., கூட்டணியில்) இருப்பேன்'' என்றார். இதைக்கேட்ட பிரதமர் மோடி புன்னகைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ