உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனுவில் ஜாதி, மதம் கூடாது : உச்ச நீதிமன்றம் உத்தரவு

மனுவில் ஜாதி, மதம் கூடாது : உச்ச நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'நீதிமன்ற வழக்குகளில், மனுதாரர்களின் ஜாதி அல்லது மதத்தை குறிப்பிடும் நடைமுறை இனி தவிர்க்கப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராஜஸ்தான் குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, கணவன் - மனைவி இடையிலான சச்சரவு தொடர்பான வழக்கை, இடமாற்றம் செய்யும் மனுவை விசாரணைக்கு ஏற்ற போது, உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.இது குறித்து நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, அசானுதீன் அமானுல்லா அமர்வு பிறப்பித்த உத்தரவு:உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில், வாதி - பிரதிவாதியின் ஜாதி அல்லது மதம் தொடர்பான விபரங்கள் இடம் பெறுவது தவிர்க்கப்பட வேண்டும்.இதுபோன்ற நடைமுறைகள் வழக்கு விசாரணைக்கு தேவையற்றதாக நீதிமன்றம் கருதுகிறது. இனி வரும் காலங்களில், வாதி - பிரதிவாதிகளின் ஜாதி, மத விபரங்களை மனுவில் குறிப்பிடும் வழக்கத்தை நீதிமன்றங்கள் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
ஜன 30, 2024 12:36

ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனி திருமணச் சட்டங்கள், விவாகரத்து சட்டங்கள் என்று இருக்கும் வரையில் வழக்கு மனுக்களிலும் ஜாதி மதம் இருக்கத்தானே செய்யும். அரசியல் சட்டத்தில் கூறியபடி பொது சிவில் சட்டத்தை அரசு கொண்டு வந்தால்???? அப்படியே ஏற்றுக் கொள்வோம் என சுப்ரீம் கோர்ட் உறுதியளிக்கட்டும்.


Ram
ஜன 30, 2024 08:40

ஜாதியை வச்சு இடவொதுக்கீடு தருகிறீர்கள், அப்போ எப்படி ஜாதி ஒழியும், உங்கள் இரட்டை அணுகுமுறையால் திறமையானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்


அப்புசாமி
ஜன 30, 2024 07:53

கோஹ்லி ஜாதி பேரே கிடையாது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 30, 2024 07:33

ஆனா சாதி மதத்தை வைத்துதான் இந்தியாவில் எல்லாமே... Pseudo-secularism .......


Kasimani Baskaran
ஜன 30, 2024 00:22

பெயரை வைத்து ஒருவரது மதத்தை சொல்லிவிட முடியும். ஆகவே அதையும் டம்மிப்பெயராக மாற்ற வேண்டும். செயற்கை நுண்ணறிவுத்தொழில் நுணுக்கத்தை வைத்து தீர்ப்பே எழுதலாம்.


Ramesh Sargam
ஜன 29, 2024 23:32

இதை என்றைக்கோ செய்திருக்கவேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை