உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அழைப்பிதழ் தேவையில்லை, ராமர் எங்கள் மனதில் உள்ளார்: திக்விஜய் சிங்

அழைப்பிதழ் தேவையில்லை, ராமர் எங்கள் மனதில் உள்ளார்: திக்விஜய் சிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் தேவையில்லை எனவும், கடவுள் ராமர் எங்கள் மனதில் உள்ளார் என்றும் காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ல் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்விற்காக முக்கியமான தலைவர்கள், பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியதாவது: எனக்கு அழைப்பிதழ் தேவையில்லை. கடவுள் ராமர் எங்களது மனதில் உள்ளார். பழைய ராமர் சிலை எங்கே? பழைய சிலையை ஏன் பிரதிஸ்டை செய்யவில்லை? புதிய ராமர் சிலை எங்கிருந்து வந்தது? புதிய சிலையை வைப்பதற்கான தேவை என்ன?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ