உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எரிபொருள் சுவிட்ச்களில் பிரச்னை இல்லை: ஏர் இந்தியா

எரிபொருள் சுவிட்ச்களில் பிரச்னை இல்லை: ஏர் இந்தியா

புதுடில்லி: 'போயிங் - 787' மற்றும் 'போயிங் - 737' ரக விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு, 'சுவிட்ச்' செயல்பாடுகளில் எந்த பிரச்னையும் இல்லை' என, 'ஏர் இந்தியா' விளக்கம் அளித்துள்ளது. குஜரா த்தின் ஆமதாபாதில் ஜூன் 12ல் நடந்த விமான விபத்துக்கு, எரிபொருள் சுவிட்ச் நிறுத்தப்பட்டதே காரணம் என, முதற்கட்ட அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள போயிங் விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் செயல்பாடுகளை ஆய்வு செய்யும்படி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தர விட்டது. இதன்பேரில், 'ஏர் இந்தியா' நிறுவனம், போயிங் 787 மற்றும் போயிங் 737 ரக விமானங்களில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதன் விபரம்: சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவின் பேரில், ஆய்வுகளைத் துவங்கி நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடித்தோம். அதில், எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்களின் செயல்பாட்டில் எந்த பிரச்னையும் கண்டறியப்படவில்லை. பயணியர் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் ஏர் இந்தியா உறுதியாக உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை