உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இலகு ரக வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் இல்லை; மஹாராஷ்டிரா அரசு தீபாவளி பரிசு!

இலகு ரக வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் இல்லை; மஹாராஷ்டிரா அரசு தீபாவளி பரிசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் இலகு ரக வாகனங்களுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று மஹாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.மஹாராஷ்டிரா சாலை மேம்பாட்டு கழகம் சார்பில், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மும்பையில் 55 மேம்பாலங்கள் கட்டப்பட்டது. இந்தப் பாலங்கள் கட்டப்பட்டதற்கான செலவை ஈடுசெய்யும் விதமாக, கடந்த 2002ம் மும்பையில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மும்பையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் இலகு ரக வாகனங்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க மஹாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக அம்மாநில பொதுத்துறை அமைச்சர் தாதாஜி தகடு புசே கூறியதாவது: மும்பைக்குள் நுழையும் போது, தஹிசார், அனந்த் நகர், வைஷாலி, ஐரோலி, முலுந்த் உள்ளிட்ட 5 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வரும் 2026ம் ஆண்டு வரையில் ரூ.45 மற்றும் ரூ.75 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகள் வழியாக 3.5 லட்சம் வாகனங்கள் வந்து செல்கின்றன. சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்களும், 2.80 லட்சம் இலகுரக வாகனங்களும் கடந்து செல்கின்றன. இந்த நிலையில், வாகன ஓட்டிகளின் நலன் கருதி, இன்று நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு இலகு ரக வாகனங்களுக்கு இனி சுங்கக்கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அரசு முடிவு செய்துள்ளது. பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, எனக் கூறினார். மஹாராஷ்டிரா அரசின் பதவி காலம் அடுத்த மாதம் நவம்பர் 26ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அடுத்த வாரத்தில் சட்டசபை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், சிவசேனா - பா.ஜ., கூட்டணி அரசு, சுங்கக்கட்டணம் விலக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

venugopal s
அக் 14, 2024 18:50

மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது அல்லவா? அப்ப சரி!


ramesh
அக் 14, 2024 18:06

தமிழ் நாட்டில் காலாவதியான சுங்க சாவடிகள் மூலம் வாகன உரிமையாளர்களை சுரண்டுவதையும் நிறுத்தினால் பாராட்டலாம் .இல்லை என்றால் இது மகாராஷ்டிரா எலக்ஷன் ஸ்டண்ட் மட்டுமே


Mohan
அக் 14, 2024 15:57

Yes. Not Deepavali price. Election Price.


GMM
அக் 14, 2024 14:59

வாகனம் உள்ளவர்களுக்கு சாலை வரி. வசூலிப்பது மாநில நிர்வாகம். இந்த பணம் சாலையில் குடை வைக்க போதாது. கிராம சாலை, மாநில சாலை வேறு. இதில் பயணிக்க வரி கிடையாது. சைக்கிளில் பயணிக்க முடியும் . சுங்கவரி தேசிய சாலை பயனாளிகளிடம் மட்டும் வசூலிப்பது. இதனை நீக்கினால் அனைத்து மக்கள் மீது வரி விதிப்பர். தேசிய சாலை முதலீடு அரசு மற்றும் பொதுமக்கள். மக்கள் முதல், வட்டி திரும்ப தர வேண்டும். தொடர் பராமரிப்பு செலவு இருக்கும். பல லட்சம் விலையில் வாகனம் , 500 ரூபாய் பெட்ரோல் விற்றால் கூட வாங்கி ஓட்ட ஆசை. அரசுக்கு வரி கட்ட மனம் இல்லை?


N Sasikumar Yadhav
அக் 14, 2024 14:55

டோல்கேட்டுகளில் கார்க்காரனுங்க தொல்லை அதிகமாக இருக்கிறது ஆகவே அனைத்து டோல்கேட்டுகளிலும் இலவசம் செய்திடுங்கள . டாடா ஏஸ் போன்ற வாகனங்களுக்கு வரியை வாங்குகிற மாதிரி கார்களுக்கும் டோல்கேட் பணத்தை வசூலிக்க வேண்டும்


Rajan
அக் 14, 2024 14:34

Why cant the government publish the cost of construction and maintenance every year? With roads being pathetic why should they ge toll? Its toll mafia


raja
அக் 14, 2024 13:58

இது போல எதேற்கெடுத்தாலும் மத்திய அரசை குற்றம் சொல்லி ஸ்டிக்கர் ஒட்டும் திராவிட மாடல் அரசின் அமைச்சர் தமிழகத்தில் செய்தால் என்ன...


பாமரன்
அக் 14, 2024 14:43

ராசுக்குட்டி... தமிழ்நாட்டில் எந்த மாநில அரசின் சாலையில் இருபது வருஷத்துக்கு மேலா சுங்ககொள்ளை அடிக்கறாய்ங்க சொல்ல முடியுமா..?? செய்யறது பூரா மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகளில்தான்..


raja
அக் 14, 2024 18:23

பாமரா என்னே உன் அறிவு அங்கே மட்டும் எப்படி ஒரு மாநில அமைச்சர் டோல் கேட் வரியை நீக்குகிரார்...


பாமரன்
அக் 14, 2024 19:05

ராசுக்குட்டி.. . கொஞ்சம் பகோடாவ குறைச்சிட்டு வெண்டைக்காய் சாப்பிட்டா மும்பையில் உள்ளே வர என்ட்ரி பாயிண்ட்களில் மாநில அரசு டோல்கேட் வச்சதையும் அந்த வசூலை தான் இப்போ நிறுத்தியதும் புரியும்... அப்பாலிக்கா உம் இஷ்டம்... அதேமாதிரி மாநில அரசு தமிழ் நாட்டில் எங்கே இருபது வருடங்கள் கலெக்சன் பண்ணிக்கிட்டு இருக்குன்னு பார்க்க எக்ஸ்ட்ரா வெண்டைக்காய் சாப்பிடனும்... பானிபூரி பீடா சாப்பிட்டா மூளை கொஞ்சம் கம்மியாதான் வேலை செய்யும்... தேசிய நெடுஞ்சாலை டோல்களை மாநில அரசு மூட முடியாதுன்னு மண்டையில் ஏறாது...புரியுதா...


Barakat Ali
அக் 14, 2024 13:55

இது தீபாவளிப் பரிசு அல்ல ....... தேர்தல் பரிசு .......


Apposthalan samlin
அக் 14, 2024 13:39

இதான் போற போக்குலே ஒரு காட்டு காட்டி விட்டு போவது ஒரு மாசம் முன்னாள் வரை வசூலித்து விட்டு பின்னால் ஆட்சி அமைப்பவர்கள் தலை மேல் விழும்


பாமரன்
அக் 14, 2024 13:08

சூப்பர் சூப்பர்..


முக்கிய வீடியோ