உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எங்களுக்கு பயமில்லை விரைவில் அறிவிப்போம்: அமேதி, ரேபரேலி வேட்பாளர் அறிவிப்பு பற்றி காங்., கருத்து

எங்களுக்கு பயமில்லை விரைவில் அறிவிப்போம்: அமேதி, ரேபரேலி வேட்பாளர் அறிவிப்பு பற்றி காங்., கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமேதி, ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ''வேட்பாளர்களை அறிவிப்பதில் எங்களுக்கு பயமில்லை, இன்னும் 24 முதல் 30 மணிநேரத்தில் வேட்பாளர்களை அறிவிப்போம்'' என காங்., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுதும் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், நேற்று (ஏப்.,30) புதிய வேட்பாளர்கள் பட்டியலை காங்., மேலிடம் வெளியிட்டது. இதில் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாளை மறுநாள் (மே 3) அந்த தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், யார் காங்., வேட்பாளர்கள் என்பது குறித்து சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

பயமில்லை

இரு தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு பற்றி காங்., பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: இன்னும் 24 முதல் 30 மணிநேரத்தில் காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முடிவை அறிவிப்பார். அதற்கு முன்னதாக வெளிவந்த தகவல்கள் அனைத்தும் போலியானவை. எந்தவித தாமதமும் இல்லை; அப்படியெனில், பா.ஜ.,வும் இதுவரை ரேபரேலி வேட்பாளரை அறிவிக்கவில்லையே! அமேதி தொகுதியில் ஏற்கனவே எம்.பி.,யாக இருப்பதால் ஸ்மிருதி இரானியை அறிவித்தனர். வேட்பாளர்களை அறிவிப்பதில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. மே 3ம் தேதி தான் வேட்புமனு தாக்கல் முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.ரேபரேலி தொகுதியில் வென்றிருந்த சோனியா, தற்போது ராஜ்யசபா எம்.பி., ஆனதால், அந்த தொகுதியில் சோனியாவின் மகளும், காங்., பொதுச்செயலாளருமான பிரியங்காவை போட்டியிட வைக்க காங்., திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், கடந்த லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் தோல்வியடைந்ததால், அவர் மீண்டும் அங்கு போட்டியிட தயங்குவதாக கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Nagarajan D
மே 01, 2024 21:46

ஆக சிறந்த கைத்தடி நான் என்று ஜெய்ராம் ரமேஷ் சொல்லவருகிறாரா? எப்ப சொல்லுவீங்க மே மாதம் தேதியா? அல்லது ஜூன் மாதம் தேதியா தேர்தலே முடிந்துவிடுமே


R KUMAR
மே 01, 2024 21:32

பயமுமில்லை, ஒன்றுமில்லை ஆனால், போட்டியிட உறுப்பினரே இல்லையென்பதே கவலையாக உள்ளது


Ramesh Sargam
மே 01, 2024 20:51

பயமில்லையென்றால், உடனே அறிவிக்க வேண்டியதுதானே ஆக, பயம் தெரிகிறது உங்களிடத்தில்


Senthil K
மே 01, 2024 20:49

ஒன்றும் பிரச்சினை இல்லை... அமோதி.. ரேபரேலி தொகுதிகளில் தவறான மனுவை தாக்கல் செய்யவும்... தேர்தல் கமிஷனே ரிஜக்ட் செய்திடும்.. அப்புறம் பிஜேபி அராஜகம் என்று ஊளையிடலாம்... ஓரே கல்லில் இரண்டு மாங்காய்... எப்படி???


M Ramachandran
மே 01, 2024 19:50

யாரும் நிற்க விருப்பம் தெரிவிக்க வில்லை இதை காங்கிரஸ் சொல்ல மெல்லவும் முடியாமால்,துப்பவும் முடியாத பரிதாப நிலை


ganapathy
மே 01, 2024 18:46

உலகிலேயே கட்சி பணம் கொடுத்தும் வேட்பாளர் போட்டியிட மறுத்து எங்க தன்னோட பெயர் லிஸ்ட்ல வந்துருமோன்னு பயப்படும் கட்சி இதுமட்டுமே.


ganapathy
மே 01, 2024 18:43

ஆமாமா நாங்கதான் அசிங்கமாச்சே??


Jai
மே 01, 2024 18:35

அமேதி ரெபரலி தொகுதிகளுக்கும் மேலாக இந்த மனிதர் இன்னும் காங்கிரஸில் முக்கிய புள்ளியாய் இருக்கிறார். ஜல்லிக்கட்டை தடை செய்வதற்கு இந்த மனிதர் கொண்டு வந்த சட்டம் தான் காரணம். காங்கிரசுக்கு ஏன் ஓட்டு போடக்கூடாது என்பதற்கு இந்த மனிதருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமே சாட்சி.


Duruvesan
மே 01, 2024 18:27

நீ யாரை வேணா நிறுத்து, விடியலை பிரச்சாரம் பண்ண சொல்லு, ராவுலு வெற்றி உறுதி


Srinivasan Krishnamoorthi
மே 01, 2024 18:07

அரசியல் ஒரு விளையாட்டு போன்றது இன்று போட்டியில் வாய்ப்பு கிடைக்க வில்லை என்றால் அவர்களுக்கு அரசியல் அஸ்தமனம் அவதில்லை இது எல்லோருக்கும் தெரியும் கார்கே தலைவர் என்ற முறையில் உணர்ச்சிவசப்படாமல் கட்சி நடத்தலாம் நரசிம்மராவ் அவர்களை முன்னுதாரணமாக கொள்ளலாம்


மேலும் செய்திகள்