வக்புவில் முஸ்லிம் அல்லாதோர்!
வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதோர் உறுப்பினர் ஆகலாம் என, சட்ட திருத்த மசோதாவில் விதி சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது ஆட்சியில் கும்பமேளா பொறுப்பாளராக முஸ்லிம் தலைவர் அசம் கான் நியமிக்கப்பட்டதை, அவர் மறந்துவிட்டாரசஞ்சய் நிருபம்:  மூத்த தலைவர், சிவசேனாகாங்., அரசின் தோல்வி!
தெலுங்கானாவில், தியேட்டரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறியது முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசின் தோல்வி. இதை மறைப்பதற்காக நடிகர் மீது பழிபோடுகிறது. இதற்கு, நடிகர் அல்லு அர்ஜுன் எப்படி பொறுப்பாவார். போலீஸ், அவரை முன்னரே தடுத்திருக்க வேண்டும்.கிஷன் ரெட்டி, மத்திய அமைச்சர், பா.ஜ.,போலி மதச்சார்பின்மை!
நாட்டில் போலி மதச்சார்பின்மை பேசும் குழு, எப்போதும் மதவாத கலவரத்தில் அரசியல் பலனடைய முயற்சிக்கிறது. இவர்கள் சனாதன கலாசாரத்தை சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். முக்தர் அப்பாஸ் நக்வி, முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,