உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பதவிக்கு ஏற்றதல்ல!

பதவிக்கு ஏற்றதல்ல!

சபாநாயகர் ஓம் பிர்லா, முன்னாள் பிரதமர் இந்திரா கொண்டு வந்த நெருக்கடி நிலையை கண்டித்து பேசியுள்ளார். அது நடந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. பின் எதற்கு தற்போது இந்த பிரச்னையை சபாநாயகர் பேசுகிறார். இது அவர் பதவிக்கு ஏற்றதல்ல.சரத் பவார், தலைவர், தேசியவாத காங்., சரத் பவார் அணி

இந்திரா மோசமாக நடத்தவில்லை!

நெருக்கடி நிலை ஜனநாயகத்தின் மீதான கறை. அதே சமயம் இந்திராவுக்கு எதிராக பேசிய எங்களை அவர் தேசவிரோதிகள் என்று கூறியதில்லை. இன்று எதிர்க்கட்சிகளை மதிக்காதவர்கள் யார் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது.லாலு பிரசாத் யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்

அரசியலமைப்பை மதித்ததில்லை!

அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என தற்போது கூறி வரும் காங்கிரஸ், ஆட்சியில் இருந்த போது, அதை மதித்ததில்லை. நேருவின் ஆட்சியில் ஹிட்லரின் சாயல் தெரிவதாக கட்டுரை எழுதியதற்காக பிரபல கவிஞர் மஜ்ரூ சுல்தான்புரியை சிறையில் அடைத்தனர்.சுதன்சு திரிவேதி, ராஜ்யசபா எம்.பி., - பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை