உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்கள் பட்டியல்: முதல் 10 இடங்களில் 2 இந்திய நகரங்கள்

போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்கள் பட்டியல்: முதல் 10 இடங்களில் 2 இந்திய நகரங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சர்வதேச அளவில் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியாவின் பெங்களூரு மற்றும் புனே நகரங்கள் இடம்பெற்றுள்ளன.இங்கிலாந்து தலைநகர் பிரிட்டன் முதலிடத்தில் உள்ளது.நெதர்லாந்தை சேர்ந்த டோம் டோம் என்ற தொழில்நுட்ப நிறுவனம் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்கள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. 55 நாடுகளின் 387 நகரங்களில் போக்குவரத்து நெரிசல், எரிபொருள் செலவு, கார்பன் உமிழ்வு ஆகியவற்றை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கான தகவல்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கார்களில் உள்ள நேவிகேசன் அமைப்பு மூலம் பெறப்பட்டது. இந்த முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டது.அதில், இங்கிலாந்து தலைநகர் லண்டன் முதலிடத்தில் உள்ளது. அயர்லாந்தின் டப்ளின் 2வது இடத்திலும், கனடாவின் டொராண்டோ 3வது இடத்திலும். இத்தாலியின் மிலன் 4வது இடத்திலும் பெரு தலைநகர் லிமா 5வது இடத்திலும் உள்ளது.கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு 6வது இடத்திலும், மஹாராஷ்டிராவின் புனே 7 வது இடத்திலும் உள்ளது.இந்த பட்டியலில் இந்திய தலைநகர் டில்லி 44வது இடத்திலும், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை 52வது இடத்திலும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

இராம தாசன்
பிப் 04, 2024 21:47

பெங்களூரு / மும்பை இல்லையா?


திகழ்ஓவியன்
பிப் 04, 2024 12:56

தமிழ்நாடு லிஸ்டில் இல்லை இங்கு பாலங்கள் அதிகம், ரோடு வசதி அருமை, எங்கள் toranto கூட லிஸ்டில் இருக்கு


ஆரூர் ரங்
பிப் 04, 2024 13:40

ஒரு தடவ சேப்பாக்கத்திலிருந்து கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்க்கு பைக் /ஆட்டோ வில் போய் விட்டு பிறகு எழுதவும்.


Indian
பிப் 04, 2024 12:50

இதற்கு காரணம் .......


அப்புசாமி
பிப் 04, 2024 12:32

வருது வருது கதி சக்தி வந்துக்கிட்டே இருக்கு..


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ