உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விஜயேந்திராவுடன் பேச தயாரில்லை

விஜயேந்திராவுடன் பேச தயாரில்லை

பெங்களூரு; ''பா.ஜ., தலைவர் விஜயேந்திராவை சந்திக்கும் அவசியம் எனக்கு இல்லை. அவர் என்னிடம் வந்து பேசினாலும், நான் பேச மாட்டேன்,'' என்று, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறி உள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:டில்லிக்கு சென்ற விஜயேந்திரா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எங்களை பற்றி புகார் சொல்லிவிட்டு வந்ததாக ஊடகங்கள் கூறுகின்றன. உண்மை எது என்று தெரியவில்லை. ஆனால் கட்சியில் இருந்து, நான் நீக்கப்பட மாட்டேன் என்பது உண்மை. என்னை எதற்காக கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். நான் யாருடனும் சமரச அரசியல் செய்யவில்லை.விஜயேந்திரா தனது பதவியை காப்பாற்றி கொள்வதற்காக, அடிக்கடி டில்லி சென்று வருகிறார். நான் யாரையும் குறை சொல்ல போவது இல்லை. என்னை விட கட்சிக்கு விசுவாசமானவர்கள் யாரும் இல்லை. காங்கிரஸ் பிச்சையால் எம்.எல்.ஏ., ஆகும் அவசியம் எனக்கு ஏற்படவில்லை. விஜயேந்திராவை சந்திக்கும் அவசியம் எனக்கு இல்லை. அவர் என்னிடம் வந்து பேசினாலும், நான் பேச மாட்டேன். மேலிட தலைவர்களிடம் மட்டும் தான் பேசுவேன். எங்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றி அனைவருக்கும் தெரியும்.வக்பு வாரிய பிரச்னை குறித்து முதல்கட்ட பாதயாத்திரை முடித்து உள்ளோம். இரண்டாம் கட்ட பாதயாத்திரை குறித்து விரைவில் முடிவு செய்வோம். எங்கள் நகர்வு மக்களை நோக்கி உள்ளது. டில்லியை நோக்கி இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ