உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்துக்கள் பற்றிய ராகுலின் பேச்சில் தவறில்லை: சஞ்சய் ராவத் சர்டிபிகேட்

ஹிந்துக்கள் பற்றிய ராகுலின் பேச்சில் தவறில்லை: சஞ்சய் ராவத் சர்டிபிகேட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ''ஹிந்துக்கள் பற்றி ராகுல் தவறாக எதுவும் சொல்லவில்லை. ஹிந்துக்கள் என்று கருதுபவர்கள் அவரது பேச்சை மீண்டும் கேட்க வேண்டும்'' என உத்தவ் சிவசேனா கட்சி எம்.பி., சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.'' பா.ஜ.,வின் ஹிந்துக்கள் வன்முறையாளர்கள்; உண்மையான ஹிந்துக்கள் அல்ல. தங்களை ஹிந்து என கூறிக்கொள்பவர்கள் 24 மணி நேரமும் வன்முறையை, வெறுப்பை துாண்டி விடுகின்றனர்,'' என, லோக்சபாவில் நேற்று (ஜூலை 1) எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதை அடுத்து அமளி ஏற்பட்டது. ''ஹிந்துக்களை வன்முறையாளர்கள் என்பதா?'' என்று பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். இது குறித்து உத்தவ் சிவசேனா கட்சி எம்.பி., சஞ்சய் ராவத் கூறியதாவது: பா.ஜ., ஒட்டுமொத்த ஹிந்து மதத்தின் பிரதிநிதி அல்ல; பா.ஜ.,வும் ஹிந்துத்துவாவும் சமம் அல்ல என ராகுல் பேசியிருந்தார். ஹிந்துத்துவா வெறுப்பை பரப்புவது இல்லை. பா.ஜ., சித்தரித்து வைத்துள்ள போலி ஹிந்துத்துவாவை ஏற்க மாட்டோம். ஹிந்துக்கள் பற்றி ராகுல் தவறாக எதுவும் சொல்லவில்லை. ஹிந்துக்கள் என்று கருதுபவர்கள் அவரது பேச்சை மீண்டும் கேட்க வேண்டும். 'ஹிந்துத்வா' என்பது மிகவும் பரந்த சொல் என்று ராகுல் கூறியதை பா.ஜ., புரிந்து கொள்ளாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Ponnambalam SB
ஜூலை 03, 2024 14:03

ராகுல் ஒரு இந்து அல்ல என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்...


ayen
ஜூலை 02, 2024 20:17

அவையில் எப்படி பேச வேண்டும் , என்ன பேச வேண்டும் என்ற விதிகள் உள்ளன. பேச்சு சுதந்திரம் என்று எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற தவறான நிலைப்பாட்டில் ராகுல் பேசியுள்ளார். அவருக்கு பிறகு பேசிய அவரது கூட்டணி கட்சியினரும் அவர்கள் அவையில் பேசுகின்றனர் என்ற நினைவு இல்லாமலேயே கட்சி பிரச்சாரம் போல் பேசி உள்ளனர்.


panneer selvam
ஜூலை 02, 2024 19:39

A loyal servant to Sonia Family so he needs to jack up Rahul ji whatever nonsense he talks


C.SRIRAM
ஜூலை 02, 2024 19:18

அடுத்தவன் சொத்தை மூட்டை போட்ட வழக்கு இன்னமும் முடியவில்லை . அதற்குள் என்னென்ன கதை சொல்றார் பாருங்க


Veeraputhiran Balasubramoniam
ஜூலை 02, 2024 17:18

திராவிட, காங்கிரச் கட்சியில் உள்ள வர்கள் நல்லவர்கள் என்று பார்த்தால் பஜக் வில் வாக்களித்துள்ள 100 சதம் தானே அவர் குறீப்பிடுகிறார்


R.P.Anand
ஜூலை 02, 2024 17:17

அதிமுக விற்கு ஒரு ஜெயகுமார் போல இவன் சிவசேனா கட்சிக்கு


Dharmavaan
ஜூலை 02, 2024 16:30

இவர்தான் சிவசேனாவின் சகுனி. உத்தவை அழித்து விடுவார் ,இவரை உத்தவ் நீக்கினால் சிவசேனா பிழைக்கும்


Abhivadaye
ஜூலை 02, 2024 15:47

திராவிட கான்க்ராஸ் கட்சிகளை ஆதரித்துவிட்டு வெடிகுண்டு வெச்சாலும் அது சிலிண்டராயிடும். ஆனா இந்த கட்சிகளை எதிர்த்தாலோ ,


vijai iyier
ஜூலை 02, 2024 14:05

ராகுல் ஹிந்துவை பற்றி பேச தகுதி இல்லை


Karthik
ஜூலை 02, 2024 20:09

நீங்க பேசுங்க


vijai
ஜூலை 02, 2024 14:03

யாரு


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி