உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாட்ஸாப் வாயிலாக நோட்டீஸ் அனுப்ப கூடாது: சுப்ரீம் கோர்ட்

வாட்ஸாப் வாயிலாக நோட்டீஸ் அனுப்ப கூடாது: சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 'வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகும்படி, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு, 'வாட்ஸாப்' உள்ளிட்ட மின்னணு முறைகள் வாயிலாக நோட்டீஸ்'அனுப்ப கூடாது' என, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்புவது தொடர்பான பிரச்னை, உச்ச நீதிமன்றத்தில் எழுந்தது.

மின்னணு முறை

இது தொடர்பாக ஆலோசனை வழங்க, மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுாத்ராவை, நீதிமன்றத்துக்கு உதவும் 'அமிகஸ் கியூரி'யாக உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ராஜேஷ் பிண்டால் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியதாவது:அமிகஸ் கியூரி சித்தார்த் லுாத்ராவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்கிறோம். அதன்படி, வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, சட்டங்களில் ஏற்கனவே குறிப்பிட்ட முறைகளை பயன்படுத்தியே நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வாட்ஸாப் போன்ற மின்னணு முறைகளை பயன்படுத்தி நோட்டீஸ் அனுப்ப கூடாது. அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள், தங்களுடைய போலீஸ் அமைப்புகளுக்கு இதை முறையாக தெரிவிக்க வேண்டும்.

ஒருமுறை கூட்டம்

நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் மாதத்துக்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும். உத்தரவுகள் செயல்படுத்தப்பட்டதன் விபரங்கள் தொடர்பான அறிக்கையையும் உயர் நீதிமன்றங்கள் தாக்கல்செய்ய வேண்டும். இதை அனைத்து உயர் நீதிமன்றங்களின் பதிவாளர்கள் மற்றும் மாநில தலைமைச் செயலர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Barakat Ali
ஜன 29, 2025 16:53

பதிவஞ்சலை மறுக்க முடியாதே ???? கையெழுத்துப் போட்டுத்தானே வாங்க முடியும் ????


ஆரூர் ரங்
ஜன 29, 2025 10:37

பழையபடி புறா விடு தூதுதான் அதிகாரப்பூர்வ அஞ்சல். அந்த புறாவையே பிடிச்சு பிரியாணி ஆக்கி சாப்பிட்டா அவமதிப்பு கேஸ் ?


அப்பாவி
ஜன 29, 2025 09:30

நம்ம மேல் உள்ள கரிசனத்தால் அல்ல. தகவல்கள் வாட்சப்பிலும், கூகுளிலும் சேகரிக்கப்படும். அதைவெச்சு அவிங்க காசு பாப்பாங்க. அதான்.


Chanemougam Ramachandirane
ஜன 29, 2025 09:24

அதற்கு தான் தீர்ப்புகளை அமுல்படுத்த தனி ஆணையத்தை நீதிமன்றம் ஏற்படுத்தி 30 நாள் பட்டு கடந்த தீர்ப்புகளை அமுல் படுத்தனும் அப்பீல் போகிறர்வர்கள் அந்த ஆணையத்தையும் பார்ட்டியாக சேர்க்கணும் இல்லயேல் தீர்ப்பை அமுல்படுத்தனும் மாற்றம் வேண்டும் நிர்வாக நடைமுறையில். நில வழக்கில் உரிமை கோரும் அனைவரும் வில்லங்க சான்று சொத்தின் ஆவனங்கள் இல்லாமல் வழக்கு தொடுத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலில் நீதிமன்றம் பொதுவான உத்திரவு வழங்கனும் மேலும் காலம் கடந்து வழக்கு தொடுப்பவர்கள் வழக்கை போலி நபர் உரிமை கோருகிறார் என்றால் உடனடியாக தீர்ப்பு வழங்கி அதில் போலி என்று தீர்ப்பில் வெளிப்படுத்தி மேல் முறையீடு பொருந்தாது என்று முதலில் நீதிமன்றம் உறுதி செய்யணும் அவ்வாறு வரும் நபர்களை போர்ஜ்ரி சீட்டிங் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யணும்.. சட்ட துறை வாயிலாக சட்டத்தை போட்டு தான் காவல் துறை வசக்கை பதியனும் அல்லது காவல் ஆணையம் பரிந்துரை பேரில் வழக்கை பதியலாம் என்று மாற்றம் வேண்டும் சட்ட நபரை நியமிப்பது பப்ளிக் ப்ரோஸெசுட்டெர் அரசு என்பதினை உணர்ந்து நீதிமன்றம் பரிந்துரை செய்து மாற்றத்தை ஏற்படுத்தனும்இது காலத்தின் கட்டாயம்


Duruvesan
ஜன 29, 2025 07:54

வாட்ஸாப் மெயில் இதெல்லாம் யூஸ் பண்ணினா கேஸ் சீக்கிரம் முடிஞ்சிடும் இல்ல,


GMM
ஜன 29, 2025 07:25

விசாரணை நோட்டீஸ் பெறும் நபர் ஒரு இடத்தில் நிலைத்து நாள் முழுவதும் இருக்க முடியாது. பிழைக்க வேலைக்கும் செல்ல வேண்டும். கடிதம் டெலிவரி சில நிமிடங்கள் மட்டும் இருக்கும். விசாரணை நோட்டீஸ் அனுப்பும் போது 2 அடுத்த தகவல் தொடர்பு சாதன பயன்பாடு கட்டாயம் ஆக்க வேண்டும். குடியிருப்பு எல்லையில் இருக்கும் கிராம அலுவலர், போஸ்ட்மேன் போன்றவருக்கு மின்னணு தகவல் தெரிவிக்க வேண்டும். விசாரணை நபர் வெளியூரில் இருந்து வந்து சேர கால அவகாசம் தேவை. அனைத்து அரசு அலுவலகமும் நோட்டீஸ் முறை ஒரே மாதிரி பின்பற்ற வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.


VENKATASUBRAMANIAN
ஜன 29, 2025 07:22

வாட் ஸ்டாப் பார்க்க மாட்டார்கள். நேரில் இருக்க மாட்டார்கள். தபால் வாங்க மாட்டார்கள். இப்படியே போனால் என்னதான் தீர்வு


lana
ஜன 29, 2025 06:46

உலகமே எவ்வளவு வேகமாக முன்னேறி வருகிறது இவர்கள் மட்டும் இன்னும் பின் தங்கிய நிலையில் இருக்கும் ஐடியா மட்டும்தான் பயன் படுத்தி வருகின்றனர். எப்படியும் வழக்கு முடிவுக்கு வர 50 ஆகி விடும்


visu
ஜன 29, 2025 06:46

வழக்குகள் விரைவாக நடப்பதில் நீதிமன்றத்திற்கு என்ன சிரமமோ


அப்பாவி
ஜன 29, 2025 06:30

வாட்சப் வாயிலாக வங்கிகள், டெலிகாம் கமெனிகள், சூதாட்ட கம்பெனிகள் அனுப்பும் செய்திகளையும் ஒழுங்கு முறை செய்யணும்.


புதிய வீடியோ