உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2025ல் தேசிய தேர்வு முகமை முற்றிலுமாக மாற்றப்படும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

2025ல் தேசிய தேர்வு முகமை முற்றிலுமாக மாற்றப்படும்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

புதுடில்லி: '2025ல் தேசிய தேர்வு முகமை முற்றிலுமாக மாற்றப்படும். உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவு தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தும். ஆட் சேர்ப்புத் தேர்வுகளை நடத்தாது' என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.தேசிய தேர்வு முகமை மத்திய அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டு நவம்பர் 2017ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் முதன்மை பணி இந்தியாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகங்கள், இந்திய மேலாண்மை கழகங்கள், பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு, நுழைவுத் தேர்வுகளை நடத்துவது தான். இந்நிலையில், 2025ல் தேசிய தேர்வு முகமை முற்றிலுமாக மாற்றப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர தெரித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f583hs1y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, தர்மேந்திர பிரதான் கூறியதாவது: 2025ல் தேசிய தேர்வு முகமை மறுசீரமைக்கப்படும். பத்து புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். 2025ம் ஆண்டு முதல் உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவு தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தும். ஆட் சேர்ப்புத் தேர்வுகளை நடத்தாது. நீட் தேர்வை பேப்பர் முறையில் நடத்துவதா அல்லது ஆன்லைனில் நடத்துவதா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு விரைவில் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

venkatan
டிச 17, 2024 15:54

இணைய வழித்தேர்வுகளால் பல ஒழுங்கீனங்களை த் தடுக்கமுடியும். வினாத்தாள் கசிவு காப்பியடித்தல் போன்றானவயும்,ஆள் மாறாட்டம் தவிர்க்க ஆதார் அடிப்படையிலான கண்ணாடி மின்ன காய் கை விரல் ரேகை ப் பதிவு,கருவிழி ஒப்புமை பயன்படுத்தலாம். பல நன்மைகளும் ஒரு சில குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு.


krishnamurthy
டிச 17, 2024 15:00

நல்ல முடிவு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை