உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகாரிகள் ‛அடி வாங்கிய சம்பவம்: மேற்குவங்க அரசிடம் அறிக்கை கேட்கும் உள்துறை அமைச்சகம்

அதிகாரிகள் ‛அடி வாங்கிய சம்பவம்: மேற்குவங்க அரசிடம் அறிக்கை கேட்கும் உள்துறை அமைச்சகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மேற்குவங்க மாநிலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை தர கோரி மேற்குவங்க அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமுல்காங்., கட்சி அமைச்சர் ஜோதிப்ரியோ மாலிக், 65. உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த போது, ரேஷன் வினியோகத்தில் நடந்த ரூ. பல கோடி ஊழல் தொடர்பாக 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் தொடர்புடைய திரிணமுல் காங்., பிரமுகர் ஷேக் ஷாஜஹானின் வீடு உள்ள வடக்கு 24 பர்கானா மாவட்டத்தின் சந்தேஷ்காளி என்ற கிராமத்திற்கு கடந்த 5-ம் தேதி அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்த காரில் சென்ற போது கட்சி தொண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர். வாகனங்கள் சேதமடைந்தன. அதிகாரி ஒருவரின் மண்டை உடைந்தது.இந்த சம்பவம் தொடர்பாக மேற்குவங்க போலீசார் எடுத்த நடவடிக்கைகள் ,பதியப்பட்டவழக்கு விவரங்கள், கைது செய்யப்பட்டவர்கள் குறித்து விரிவான அறிக்கையை தர கோரி மத்திய உள்துறை அமைச்சகம் ,மேற்குவங்க அரசை வலியுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

மோகனசுந்தரம்
ஜன 10, 2024 06:49

அறிக்கை கிடைத்ததும் எண்ணத்தைக் கிழிக்க போகிறீர்கள். நடவடிக்கை எடுக்க அருகதையற்ற ஒன்றிய அரசு அறிக்கையை வாங்கி குப்பைத்தொட்டையில் போடும்.


Sathyasekaren Sathyanarayanana
ஜன 10, 2024 06:28

பாதுகாப்பிற்காக சென்ற துணைராணுவப்படையினர் வைத்து இருந்தது பொம்மை துப்பாகியா? தாக்குதல் நடத்தும்போது ஏன் பாதுகாப்பிற்காக சுடவில்லை? சுடக்கூடாது, வேடிக்கை மட்டும் தான் பார்க்கவேண்டும் என்று முன்பே அறிவுறுத்தி அனுப்பப்பட்டனரா? உயிர் பயம் காட்டினால்தான் இந்த மூர்க்க கூட்டத்தினர் அடங்கி இருப்பார்கள். வேறு எந்த மொழியும் இந்த காட்டுமிராண்டிகளுக்கு புரியாது.


ரமேஷ்VPT
ஜன 10, 2024 03:53

மம்தா பேகத்தை அரசியலிலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு விஷ ஜந்து. மேற்குவங்கமே இப்பொழுது ஒரு மினி பாக்கிஸ்தானாக மாறிகொண்டிருக்கிறது.


vaiko
ஜன 09, 2024 22:02

இடி மாதிரி இறங்கிய அதி என ரிப்போர்ட் கொடுக்க வேண்டும்.


Seshan Thirumaliruncholai
ஜன 09, 2024 21:26

I.N.D.I.A கூட்டணிக்கு அடிமேல் அடி .தி மு க ஊழல் பட்டியல். சரத்குமார் ஸ்திரமற்ற நிலை. அயோத்தி ராமன் விவகாரத்தில் தடுமாறும் காங்கிரஸ் . கேஜரிவால் விசாரணைக்கு டிமிக்கி கொடுத்தல் குருடர்கள் யானையை தடவி பார்த்ததுபோல் இருக்கிறது கூட்டணி


Kanakala Subbudu
ஜன 09, 2024 21:19

அவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு போலீசில் யாரோ அடித்ததாக புகார் கொடுத்தார்கள் என்று முடித்து விடலாம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை