உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல்; டில்லியில் 4 பேர் கைது

மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல்; டில்லியில் 4 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி போலீசார் ரூ.3.5 கோடிக்கும் அதிகமான, செல்லாத ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.டில்லியில், கள்ள நோட்டுகள், செல்லாத ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, பல்வேறு இடங்களில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர். ஷாலிமர் பாக் மெட்ரோ ஸ்டேஷன் அருகே சந்தகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் இடம் இருந்த பையை சோதனையிட்டதில் அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i4vv2dec&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவை அனைத்தும் செல்லாத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து ரூ.3.5 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகளை டில்லி போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் நான்கு பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

MARUTHU PANDIAR
டிச 11, 2025 21:36

இன்னும் ஆழமாக விசாரணை செய்து கிங் பின்னுக்கு/ பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கா இல்லையான்னுட்டு கண்டு பிடிக்கணும்.


தத்வமசி
டிச 11, 2025 18:39

பாவம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து கோடி கோடியாக பதுக்கி வைத்து காத்திருந்த கூட்டத்திற்கு கிடைத்த அதிர்ச்சியால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இனி நடக்காது என்று தெரிந்தவுடன் வெளியே விட்டு பாமர மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்.


ganesha
டிச 11, 2025 18:36

இந்த நோட்டுக்களுக்கு மறுபடியும் புத்துயிர் குடுப்பேன் னு சிதம்பரம் சொல்லிருக்கார்


GMM
டிச 11, 2025 17:57

பணம் மதிப்பு இழப்பு நல்ல கொள்கை. செயல் படுத்திய விதம் மூலம் ஊழல் பண மதிப்பு குறையவில்லை? வங்கியும் ஊழல் உற்பத்தியாளர்களும் நண்பர்கள் என்று மத்திய அரசுக்கு தெரியும். 2000 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியில் செலுத்தி, ஒப்புதல் பெற்று, கணக்குள்ள வங்கியில் புதிய ரூபாய் பெற்று கொள்ள செய்தால், பலன் தெரியும். ஊழல் இல்லாத நீதி, நிர்வாகம் இருந்தால், சம்பாதிப்பதை விட ஊழல் பணத்தை பாதுகாப்பது கடினம் என்று தோன்றும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை