மேலும் செய்திகள்
சாலை விபத்தை தடுக்க சிறப்பு இயக்கம்: ராஜஸ்தான் அரசு இலக்கு
49 minutes ago
இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் தங்க்மேய்பன்ட் பகுதியில் தனமஞ்சுரி பல்கலை உள்ளது. இந்த பல்கலை வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென குண்டு வெடித்தது. இதில் இருவர் காயம் அடைந்து உயிருக்கு போராடினர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி ஒய்னம் கென்னகி, 24, என்பவர் உயிரிழந்தார். காயம் அடைந்த சலாம் மிசெல், 24, நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், 'இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை' என்றனர்.
49 minutes ago