உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆலையில் வெடி விபத்து மஹா.,வில் ஒருவர் பலி

ஆலையில் வெடி விபத்து மஹா.,வில் ஒருவர் பலி

நாக்பூர்: மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள பஜார்கான் பகுதியில், 'சோலார்' நிறுவனத்தின் வெடிமருந்து ஆலை உள்ளது. நேற்று அதிகாலை இங்கு திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டடம் முற்றிலும் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்; எட்டு பேர் காயமடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்து குறித்து ஆலையின் முதுநிலை மேலாளர் ஆசிஷ் குமார் ஸ்ரீவத்சவா கூறுகையில், ''முன்கூட்டியே வெடி விபத்துக்கான அறிகுறி தெரிந்ததால், பெரும்பாலான தொழிலாளர்கள் தப்பி சென்றனர். மேலும், வெடி விபத்துக்கு பின் ஆலையில் தானாகவே குளிர்விப்பான் முறை செயல்பட துவங்கியதால், ஆலையில் இருந்தோர் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ