உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆன்லைன் சூதாட்டம்; 3 நாட்களில் 2 உயிரிழப்புகள்; என்ன செய்கிறது தமிழக அரசு?: கேட்கிறார் அன்புமணி

ஆன்லைன் சூதாட்டம்; 3 நாட்களில் 2 உயிரிழப்புகள்; என்ன செய்கிறது தமிழக அரசு?: கேட்கிறார் அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.மேலும், அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் இரு முறை நிறைவேற்றப்பட்டும் கூட, திறமை சார்ந்த விளையாட்டுகளான ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்றவற்றை அந்த சட்டங்களின் மூலம் தடை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் காரணமாக ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் தழைத்து அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிக்கத் துவங்கியுள்ளன. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கடந்த 3 நாட்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை என்றால் இத்தகைய உயிரிழப்புகளை தடுக்க முடியாது என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.ஆன்லைன் ரம்மியை தடை செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தான் ஒரே தீர்வு ஆகும். உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் ரகுபதி கூறியிருக்கும் போதிலும் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

R Kay
ஜன 09, 2024 02:28

சுயக்கட்டுப்பாடு இல்லாத பேராசை கொண்ட நோகாமல் நுங்கு சாப்பிட நினைக்கும் சோம்பேறி கூட்டத்தை எந்த சட்டத்தாலும் காப்பாற்ற இயலாது. அப்பன் காசில் வாழாத நம்மை போன்ற சாமானியர்களுக்கு உழைத்தால்தான் அடுத்த வேளை சாப்பாடு.


Ramesh Sargam
ஜன 09, 2024 00:57

ஆன்லைன் சூதாட்டத்தை ஆதரித்த அந்த நடிகர் சரத் குமார் என்ன சொல்கிறார் இதுபோன்ற உயிரிழப்புக்களை பற்றி ..?


Parthasarathy Badrinarayanan
ஜன 08, 2024 19:10

பணத்தாசையால் செத்தவர்களுக்காக அன்புமணி வக்காலத்து வாங்குவது கேவலம். அப்படி பேராசையால் சூதாடி இறப்பவர்களுக்கு அனுதாபப் படுவது முட்டாள்தனம்


VENKATASUBRAMANIAN
ஜன 08, 2024 19:09

இதை வைத்து எப்படியெல்லாம் ஆளுநர் மீது அரசியல் செய்தார்கள். இப்போது திராவிட மாடல் அரசு என்ன செய்கிறது. இதற்கு ஆர் எஸ்பாரதி ஊடகங்கள் எப்படியெல்லாம் கூவின. இதற்கு எத்தனை பத்திரிக்கையாளர் கள் ஜால்ரா அடித்தார்கள். இப்போது அதை பற்றி மூச்சு கூட விடுவதில்லை. மக்கள் புரிந்து கொண்டால் சரி


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 08, 2024 16:54

கூட்டணிக்கு ஒத்துக்கலைன்னா இப்படித்தான் கேள்வி கேட்போம் .....


திகழ்ஓவியன்
ஜன 08, 2024 19:02

எப்படி DMK மீது ED RAID செய்கிறாரே MODI அப்படியா


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 08, 2024 21:42

பாஜக கூட்டணிக்கு அழைத்தால் போக மறுக்கும் அளவுக்கு காங்கிரஸ் மீது கற்பின் திண்மை கொண்ட கட்சியா திமுக ????


திகழ்ஓவியன்
ஜன 08, 2024 23:06

அதி நீ அஜித் பவார் சுவேந்து கிட்டதான் கேட்கணும்


Ramachandran Krishnamurthy
ஜன 08, 2024 16:41

Father is meeting CM at secretariat, while son is questioning the state government. PMK alliance drama moves for next election has started. As always they want to be first off the block in alliance seats bargaining


அப்புசாமி
ஜன 08, 2024 16:04

இவர் ஆட்சியிலிருந்தால் சூதாடி தோத்தவங்களுக்கு இழப்பீடு கொடுத்துருவாரு...ப்


அப்புசாமி
ஜன 08, 2024 16:02

மத்திய அரசு சொல்லிருச்சே... அன்புமணிக்கு தெரியாதா? அவர் பாய வேண்டியது அங்கே...


ராஜா
ஜன 08, 2024 15:59

சாலை விபத்துக்களில் கூடத்தான் தினமும் நூறு, இருநூறு பேர் சாகிறார்கள். அதற்காக தரமான சலைகளை அமைத்து, மக்களை சாலை விதிகளை பின்பற்றவைக்க வைக்கவா முடியும்?


Jysenn
ஜன 08, 2024 15:59

To increase the number of suitcases?


மேலும் செய்திகள்